கம்பராமாயணம் 4663 · கிட்கிந்தா 13.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்ன பொழுதின்கண் - அச் சமயத்தில்; அவ்அணங்கும் - அந்தச் சுயம்பிரபையும்; அறிவுற்றாள் - (யோக நிலையிலிருந்து நீங்கித் தன் நினைவு வரப்பெற்றாள் (அவர்களைப் பார்த்து); அனையர் - தனக்கு எதிரில் அவர்கள்; சேறல் முறை அன்று என - வருவது தகாது என்று; முன் முனிந்தாள் - உணர்ச்சி உற்றவுடன் முதலில் கோபங்கொண்டு; துன்ன அரிய - (நீங்கள்) எவரும் அணுக முடியாத; பொன் நகரியின் உறைவிர் அல்லீர் - பொன்மயமான இந்த நகரத்தில் வாழ்வதற்கு உரியவராக இல்லை; வரவு என்ன - (நீங்கள்) இங்கு வரக் காரணம் என்ன; யாவர் - (நீங்கள்) யாவர்? உரை செய்க என - சொல்லுங்கள் என்று; இசைத்தாள் - கேட்டாள்.
தவம் செய்யும் பெண்ணாகிய தன்னெதிரில் ஆடவர் பலர் வந்ததால் சுயம்பிரபை கோபித்தாள் என்பது. அறிவுற்றாள்: தன் உணர்வு வரப்பெற்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment that lady too came back to awareness;
- angered at first that such as they should come before her, she
- said, 'You are not dwellers in this golden city that none can approach;
- why have you come? who are you? tell me.'
What the poem says
Cuyampirapai comes out of her meditation and is at first angry to find a crowd of males standing before her, a woman ascetic. She demands to know who they are and how they have entered her golden city, which no one can reach.