கம்பராமாயணம் 4668 · கிட்கிந்தா 13.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாருதியும் - அனுமனும்; அவள் மலர் சரண் வணங்கி - அந்தச் சுயம்பிரபையின் தாமரைமலர் போன்ற அடியிணைகளைத் தொழுது; யார் இந்நகருக்கு இறைவர் - இந்த நகரத்துக்குத் தலைவர் யார்? நின் இயற் பேர் யாது - உனது இயற்கையான பெயர் என்ன? பார் புகழ் தவத்தினை - உலகத்தவர் புகழ்வதற்குக் காரணமான தவம் மேற்கொண்டவளே! பணித்து அருளுக - (இவற்றைச் சொல்வாயாக; என்றான் - என்று கேட்டான்; சோர்குழலும் - (சடைபட்டுத்) தொங்கும் கூந்தலையுடைய அந்தச் சுயம்பிரபையும்; அவனோடு - அந்த அனுமனிடம்; உற்றபடி சொன்னாள் - நடந்தவற்றை நடந்தபடியே கூறலாயினாள்.
பணித்துஅருள்க என்ற தொடரில் அனுமனின் பணிவு புலப்படுதல் காண்க. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (125) பணிவுடையன் இன்சொலன் ஆதல் (95) என்ற குறள் தொடர்களுக்கு அனுமன் இலக்கியம் ஆவான். சோர்குழல்: வினைத் தொகையன்மொழி. 'மற்று' இரண்டும் அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Māruti, bowing at her lotus feet, asked,
- 'Who is the lord of this city? What is your own name?
- You whose penance the whole world praises, graciously tell us';
- and she of the trailing hair told him everything as it had happened.
What the poem says
Aṉumaṉ bows at her feet and humbly asks who rules the city and what her name is. The commentary points to his courtesy here as a living example of the Tirukkuṟaḷ's teaching that humility and sweet speech become everyone. Cuyampirapai then begins her story.