கம்பராமாயணம் 4667 · கிட்கிந்தா 13.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கேட்டு - அனுமன் கூறிய இராமனது வரலாறு முழுவதும்) கேட்டு; அவளும் - அந்தச் சுயம்பிரபையும்; என்னுடைய கேடுஇல் தவம் - நான் செய்த கெடுதல் இல்லாத தவம்; இன்னே வீடு காட்டியது - இப்பொழுதுதான் சாப நீக்கத்தை உண்டாக்கியது; என - என்று சொல்லி; விரும்பி - அந்த வானரவீரரிடம் அன்பு பூண்டு; கால் நீர் நனி ஆட்டி - அவர்களின் கால்களை நீரால் நன்கு கழுவி; அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் - தேவாமிர்தம் போன்ற சுவையுடைய இனிய உணவை; அன்போடு ஊட்டி - அன்புடன் உண்ணச் செய்து; மனன் உள் குளிர - (அவர்களது) உள்ளம் குளிரும்படி; இன் உரை உரைத்தாள் - இனிய சொற்களைச் சொன்னாள்.
சுயம்பிரபை அவ் வானரர்களின் காலை நீராட்டி அமுதூட்டினாள் என்பது. விருந்தினரை வரவேற்று அவர்களைத் தெய்வமெனப் பேணுதற்குச் செய்யும் சடங்கு இது. அமிழ்து போன்று இனிய அறுசுவையுண்டியென்பார் இன்னடிசில் என்றார். மோப்பக் குழையும் (90) என்ற திருக்குறள் உரைவிளக்கத்தில் சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும் அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும் அவைபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்று என்பர் பரிமேலழகர் சுயம்பிரபையின் விருந்தோம்பற் பண்பினைப் பரிமேலழகர் உரையுடன் ஒப்பிட்டுணரலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing it, she said, 'My unfailing penance has at this very moment
- shown me release!' and, full of love, she washed their feet well with water,
- fed them lovingly with sweet food that tasted like nectar,
- and spoke sweet words, so that their hearts were cooled within.
What the poem says
Hearing the story, Cuyampirapai rejoices that her long penance has at last brought her release from the curse. She receives the monkeys as honoured guests, as if they were gods: she washes their feet, feeds them a delicious meal and speaks kindly to them.
The commentary cites the classic Tamil ideal of hospitality from the commentator Parimēlaḻakar on the Tirukkuṟaḷ: a welcoming face when guests are first seen, kind words when they arrive, and generous care once they are received.