கம்பராமாயணம் 4671 · கிட்கிந்தா 13.60

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவளும் அன்னவனும் - அந்தத் தேவமாதும், அந்த மயனும்; புணர்ந்து - கூடி (இன்பம் துய்த்து); அன்றில் விழை போகத்து - அன்றில் பறவையும் விரும்பும்படியான சிற்றின்பத்தில்; உணர்ந்திலர் - (வேறொன்றையும்) அறியாதவர்களாய்; நெடும்பகல் இம்மாநகர் - பலகாலம் இந்தப் பெரிய நகரத்தில்; உறைந்தார் - வசித்தார்கள்; கணங்குழையினாளொடு - திரண்ட காதணி பூண்ட அப் பெண்ணுடன்; உயர் காதல் ஒருவாது - சிறந்த அன்பு நீங்காது; உற்று இணங்கி வரு - நெருங்கிப் பழகி வருகின்ற; பாசம் உடையேன் - பாசமுடையவளாகிய நான்; உடன் இருந்தேன் - அந்தப் பெண்ணோடு இங்கேயே இருந்துவிட்டேன்.

மயனும், தேவமாதும் சிற்றின்பத்தில் மூழ்கி இங்கு வசிக்குங் காலத்தில் என் உயிர்த்தோழியான அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் நானும் அவளுடன் இருந்தேன் என்றாள் சுயம்பிரபை. பகல்: நாள்கள் - இலக்கணை. காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பமாதலின் 'உயர் காதல்' எனப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'United, she and he, lost in a pleasure that even the anṟil bird might envy,
  2. knew nothing else, and lived for many long days in this great city;
  3. and I, bound by a deep love that never left her of the clustered earrings,
  4. held to her by affection, stayed here with her.'

What the poem says

Mayaṉ and the nymph lived here for a long time, absorbed in each other like the anṟil birds, which are said never to part from their mates.

Cuyampirapai could not bear to leave her dear friend, so she stayed in the city with them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'puṇarntu, avaḷum aṉṉavaṉum, aṉṟil viḻai pōkattu
uṇarntilar, neṭum pakal im mā nakar uṟaintār;
kaṇaṅ kuḻaiyiṉāḷoṭu uyar kātal oruvātu uṟṟu,
iṇaṅki varu pācamuṭaiyēṉ uṭaṉ iruntēṉ.'