கம்பராமாயணம் 4673 · கிட்கிந்தா 13.62

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'முனிந்து அவளை, "உற்ற செயல் முற்றும் மொழிக " என்ன,
கனிந்த துவர் வாயவளும் என்னை, இவள் கண்ணா
வனைந்து முடிவு உற்றது என மன்னனும் இது எல்லாம்
நினைந்து'இவண் இருத்தி நகர் காவல் நினது'என்றான்.'

பொருள் · Meaning in Tamil

அவளை முனிந்து - (அந்தத் தேவமாதை இந்திரன் அவ்வாறு கோபித்து; உற்ற செயல் முற்றும் மொழிக - நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறுக; என்ன - என்று கட்டளையிட; கனிந்த துவர் வாயவளும் - நன்றாக முற்றிய பவழம்போன்ற இதழையுடைய அந்த ஏமையும்; என்னை - என்னைப் பற்றிக் கொண்டு; இவள் கண்ணாய் வனைந்து - இவளால் (இப்பழிப்புச் செயல்) தொடுக்கப்பட்டு; முடிவுற்றது என - முடிந்ததெனத் தெரிவிக்க; மன்னனும் - இந்திரனும்; இது எல்லாம் நினைந்து - இவற்றையெல்லாம் நன்றாக ஆராய்ந்து (என்னைப் பார்த்து); இவண் இருத்தி - இந்த நகரிலேயே (தனியாக) தங்குவாய்; நகர் காவல் நினது - நகரத்தைப் பாதுகாக்கும் வேலை உன்னுடையது, என்றான் - என்று கூறினான்.

நடந்த செயலை என் தோழியாலறிந்த இந்திரன் எல்லாவற்றிற்கும் முதற் காரணம் நானே எனத் தெளிந்து என்மீதுள்ள கோபத்தால் ஒருவரு மில்லாத இந்த நகரத்தைப் பாதுகாத்துத் தனியே இருக்குமாறு கட்டளையிட்டான் என்பது. மன்னன்: இந்திரன். 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' - தொல். பொருள். 5.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Angry with her, he said, "Tell me all that has happened,"
  2. and she of the ripe coral lips said that it was through me,
  3. this one here, that it had all been planned and carried out; and the king, weighing it all,
  4. said, "Stay here; the guarding of this city is yours."'

What the poem says

Ordered to tell the whole story, the nymph named Cuyampirapai as the one who had arranged everything. Intiraṉ judged her to be the root cause and, as punishment, ordered her to stay alone in the empty city and guard it.

The commentary notes that the "king" here is Intiraṉ, citing the old grammar Tolkāppiyam, which names him as the god of the well-watered farmlands.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muṉintu avaḷai, "uṟṟa ceyal muṟṟum moḻika" eṉṉa,
kaṉinta tuvar vāyavaḷum eṉṉai, ivaḷkaṇ āy
vaṉaintu muṭivuṟṟatu eṉa maṉṉaṉum itu ellām
niṉaintu 'ivaṇ irutti nakar kāval niṉṉatu' eṉṟāṉ.'