கம்பராமாயணம் 4674 · கிட்கிந்தா 13.63

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்றலும்; வணங்கி,'இருள் ஏகும் நெறி எந்நாள்?
ஒன்று, உரை, எனக்கு முடிவு" என்று உரை செயாமுன்,
"வன்திறல வானரம் இராமன் அருள் வந்தால்
அன்று முடிவு ஆகும் இடர்" என்று, அவன் அகன்றான்.

பொருள் · Meaning in Tamil

என்றலும் - என்று இந்திரன் எனக்குக் கட்டளையிட்டவுடனே; வணங்கி - (நான் அந்த இந்திரனைத் தொழுது; இருள் ஏகும் நெறி எந்நாள் - என்னுடைய இத்துன்பம் நீங்குவதற்குரிய வழி எக்காலத்து உண்டாகும்? எனக்கு முடிவு ஒன்று உரை - என் துன்பத்திற்கு முடிவு காலம் ஒன்றைச்சொல்வாய்; என்று உரை செயாமுன் - என்று கேட்பதற்கு முன்னேயே; அவன் - அவ் இந்திரன்; வன் திறல் அவ்வானரம் - மிக்க வலிமையுடையவானரங்கள்; இராமன் அருள் வந்தால் - இராமனது கட்டளையால் இங்குவந்தால்; அன்று - அக்காலத்தில்; இடர் முடிவு ஆகும் - உனது துன்பம்ஒழியும்; என்று அகன்றான் - என்று சொல்லித் தன் நகருக்குச் சென்றான்.

நான் செய்த பிழைக்குத் தண்டனையாக என்னை இங்கே இருக்குமாறு தேவேந்திரன் கட்டளையிட்டவுடன், 'எனது துன்பம் நீங்கும் காலம் எப்போது' என்று நான் அவனைத் தொழுது கேட்டதற்கு அவனும், 'இராம தூதராகிய வானரர்கள் இங்கு வரும்பொழுது உனது துன்பம் நீங்கும்' எனச் சாபவிமோசனம் கூறிச் சென்றான் என்பது. இருள்: துன்பம் - இலக்கணை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When he said this, I bowed: "When will there be a way for this darkness to pass?
  2. Tell me just one thing, the end of my trouble"; and before I had finished speaking,
  3. "When the monkeys of great strength come here by the grace of Irāmaṉ,
  4. on that day your suffering will end," he said, and went away.'

What the poem says

Cuyampirapai bowed and begged Intiraṉ to tell her when her sentence would end. Before she had even finished asking, he named the term of the curse: it would end when mighty monkeys came there on Irāmaṉ's errand. Then he left. This is why the monkeys' arrival filled her with such joy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum; vaṇaṅki, 'iruḷ ēkum neṟi en nāḷ?
oṉṟu, urai, eṉakku muṭivu" eṉṟu uraiceyāmuṉ,
"vaṉ tiṟal av vāṉaram irāmaṉ aruḷ vantāl
aṉṟu muṭivu ākum iṭar" eṉṟu, avaṉ akaṉṟāṉ.