கம்பராமாயணம் 4675 · கிட்கிந்தா 13.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அண்ணல் - பெருமை மிக்க அனுமனே! உண்ண உள - (எனக்கு இங்கே) உண்பதற்குரிய (கனி முதலிய) பொருள்கள் உள்ளன; பூச உள - பூசுவதற்குரிய கலவைச் சாந்து முதலிய பொருள்கள் உள்ளன; சூட உள - தலையில் சூடுவதற்குரிய மலர்மாலைகள் முதலியன உள்ளன; ஒன்றோ - இவைமட்டுந்தானா? வண்ண மணி ஆடை உள - நல்ல நிறத்தோடு கூடிய அழகிய ஆடைகளும் உள்ளன; மற்றும் உள - (இவையேயல்லாமல்) இன்னும் அணிகள் முதலியன யாவும் உள்ளன; பெற்றேன் - இவையனைத்தையும் நான் அடைந்துள்ளேன்; (என்றாலும்) அவை முற்றும் அற விட்டு - அவற்றைத் துய்க்காமல் எல்லாப் பற்றுக்களையும் நீக்கி; வினை வெல்வான் - (என்) தீவினையை வெல்லும் பொருட்டு; எண்ண அரிய பல்பகல் - எண்ணுவதற்கு அரிய நெடுங்காலமாக; இருந்தவம் இழைத்தேன் - பெருந்தவத்தைச் செய்தேன்.
இன்பத்திற்குரிய பல பொருள்கள் இந் நகரில் இருந்தும், எனது சாபம் நீங்குமாறு பல காலமாகப் பெருந்தவம் புரிந்து கொண்டிருந்தேன் என்று சுயம்பிரபை கூறினாள் என்பது. ஓகாரம்: பிரிநிலை. அண்ணல்: அண்மைவிளி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There are things to eat; there are things to anoint oneself with; there are flowers to wear; and is that all?
- there are clothes of fine colours and gems; there is more besides; all this I had;
- yet, noble one, giving it all up entirely, to overcome my karma
- I have done hard penance for more long days than can be counted.'
What the poem says
The city held everything she could want: food, fragrant pastes, flowers, fine clothes and jewels. Yet Cuyampirapai renounced it all and spent countless days in severe penance to wipe out the fault that had brought on her curse.