கம்பராமாயணம் 4676 · கிட்கிந்தா 13.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐயா - பெரியவனே! அமைந்த பிலம் - பொருந்திய இக் குகைத் துவாரமானது; ஐ இருபது ஓசனை மெய் உளது - நூறு யோசனை விரிந்த வடிவு கொண்டது; மேல் உலகம் ஏறு நெறி காணேன் - வானுலகத்திற்கு ஏறிச் செல்லும் வழியை அறியேன்; உதவுவீர் எனின் - (நீங்கள் எனக்கு) உதவி செய்வீர்களென்றால், உய்யும் நெறி உண்டு - (நான்) ஈடேறுவதற்கு வழிஏற்படும்; உபாயம் செய்யும் வகை - அதற்கான உபாயம் செய்யும் விதத்தை; சிந்தையில் சிறிது நினைத்திர் - உங்கள் மனத்தில் சிறிது கருதுங்கள்; என்றாள் - என்று கூறினாள் (சுயம்பிரபை.
இந்தப் பிலம் நூறு யோசனை பரப்புள்ளதாய் இருள் அடர்ந்திருப்பதால் மேலே ஏறிச் செல்லும்வழி இதுவென தெரியாதபடி இந்திரனது சாபம் என்னைத் தடை செய்கிறது; என் சாபவிடைக் காலம் குறுகி உங்கள் வருகையால் நான் ஈடேறும் வகையும் உள்ளது. ஆதலால், அவ்வாறான உபாயத்தைச் செய்ய வேண்டுமென்று அனுமன் முதலியோரைச் சுயம்பிரபை வேண்டினாள் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'This cavern, sir, stretches a hundred yōjaṉas;
- that is the truth; I cannot see the way to climb to the upper world;
- there is a way for me to be saved, if you will help; of a means
- to bring it about, think a little in your minds,' she said.
What the poem says
Cuyampirapai explains that the cavern is a hundred yōjaṉas across and so dark that, under Intiraṉ's curse, she cannot find the way up to the world above.
Now that the monkeys have come, her release is at hand, and she asks them to think of some way to get her out.