கம்பராமாயணம் 4677 · கிட்கிந்தா 13.66

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னது சுயம்பிரபை கூற, அனுமானும்
மன்னுபுலன் வென்றுவரும் மாது அவள் மலர்த்தாள்
சென்னியின் வணங்கி,'நனி வானவர்கள் சேரும்
பொன் உலகம் ஈகுவல், நினக்கு'எனல் புகன்றான்.

பொருள் · Meaning in Tamil

சுயம்பிரபை - சுயம்பிரபை; அன்னது கூற - அவ்வாறான சொற்களைச் சொல்ல; அனுமானும் - அனுமனும்; மன்னு புலன் வென்று வரு - பொருந்திய ஐம்புலன்களையும் வெற்றி கொண்ட; மாது அவள் மலர்த்தாள் - அந்தப் பெண்ணின் தாமரை மலர் போன்ற அடிகளை; சென்னியின் வணங்கி - தலையால் வணங்கி; நினக்கு - உனக்கு; வானவர்கள் நனி சேரும் - தேவர்கள் மிகுதியாகக் கூடி நிற்கும்; பொன்னுலகம் ஈகுவல் - பொன்மயமான தேவருலகத்தை அளிப்பேன்; எனல் புகன்றான் - என்று சொன்னான்.

மேலுலக நெறியைக் காட்டுமாறு வேண்டிய சுயம்பிரபைக்கு, அவ்வாறே செய்வதாக அனுமன் வாக்களித்தான் என்பது. புலன்களை வென்று தவம் செய்தவாறு அனுமன், அவள் திருவடியை வணங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When Cuyampirapai had said this, Aṉumaṉ
  2. bowed his head at the lotus feet of that lady who had conquered the senses,
  3. and declared, 'To you I will give the golden world
  4. where the gods gather in throngs.'

What the poem says

Aṉumaṉ honours Cuyampirapai as one who has mastered her senses through penance and bows at her feet. He promises to get her out of the cavern and restore her to the golden world of the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉatu cuyampirapai kūṟa, aṉumāṉum
maṉṉu pulaṉ veṉṟu varu mātu avaḷ malarttāḷ
ceṉṉiyiṉ vaṇaṅki, 'naṉi vāṉavarkaḷ cērum
poṉṉulakam īkuval, niṉakku' eṉal pukaṉṟāṉ.