கம்பராமாயணம் 4678 · கிட்கிந்தா 13.67

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முழைத்தலை - (மற்றைய வானரவீரர் அனுமனை நோக்கி) இந்தப் பிலத்துவாரத்தில்; இருட்கடலில் மூழ்கி - இருளாகிய கடலில் மூழ்கி, முடிவேமை - இறக்க வேண்டிய எங்களை; உயிர் பிழைத்து உயிர்க்க - இறவாமல் தப்பி வாழும்படி; அருள் செய்த - கருணை புரிந்த; பெரியோனே - பெருமைக் குணமுடையவனே! செயல் ஆயவினை - இனிச் செய்யத்தக்க செயலை; இழைத்தி - செய்வாய்; என்றனர் இரந்தார் - என்று பணிந்து வேண்டினார்கள்; வழுத்த அரிய மாருதியும் - புகழ்ந்து கூறமுடியாத (மிக்க நற்குணங்களையுடை) அனுமனும்; அன்னது வலிப்பான் - அவ்வாறே செய்வதற்கு மனத்தினில் உறுதிகொண்டான்.

இந்தப் பிலத்துள் சீதை இல்லையென்பது தெளிவாக விளங்க, இனி இங்கிருப்பதால் எவ்விதப் பயனுமில்லையாதலால் உடனே வெளியே செல்வதற்குரிய செயலை நாடவேண்டுமென்று அனுமனை மற்றை வானரர் வேண்டிக்கொள்ள, அனுமனும் அதற்கு இசைந்தான் என்பது. எங்களைப் பிலத்தில் பாதுகாத்தது போலவே இந்தச் சுயம்பிரபையும் இப் பிலத்திலிருந்து நற்கதியடையுமாறு பாதுகாக்க வேண்டுமென்று வானரவீரர் அனுமனை வேண்டினர் எனவும் கூறுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "We who were to perish, sunk in the sea of darkness inside this cave,
  2. you, great one, graciously let us escape and breathe again;
  3. now do the deed that must be done," they pleaded,
  4. and Māruti, beyond all praise, resolved to do just that.

What the poem says

The monkey search party sent south to find Cītai has wandered into a vast dark cavern and found there only an enchanted city and its ascetic keeper, Cuyampirapai. Cītai is plainly not here, so the others beg Aṉumaṉ, who has already guided them through the darkness, to find a way out. He agrees.

Some read the plea as also asking Aṉumaṉ to free Cuyampirapai herself from the cave, as the next verses show he does.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muḻaittalai iruṭ kaṭaliṉ mūḻki muṭivēmaip
piḻaittu uyir uyirkka aruḷ ceyta periyōṉē!
iḻaitti ceyal āya viṉai' eṉṟaṉar irantār;
vaḻutta ariya mārutiyum aṉṉatu valippāṉ.