கம்பராமாயணம் 4679 · கிட்கிந்தா 13.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நடுங்கன்மின் எனும் - (அனுமன் மற்றவரை நோக்கி) அஞ்சாதீர்கள் என்ற; சொலை நவின்று - அபயமொழியைக் கூறி; நகை நாற - புன்சிரிப்புத் தோன்ற; மடங்கலின் எழுந்து - ஆண்சிங்கம் போலக் கிளம்பி; மழை ஏறு அரிய - மேகங்களும் ஏறிச் செல்லமுடியாத; வானத்து உலகொடு - (அப்பாலுள்ள) வானுலகத்தோடு; ஒடுங்கல் இல் பிலம் - குறுகல் இல்லாத (அகன்ற) குகையானது; தலை திறந்து ஒன்ற - தலையிடம் திறந்து ஒன்றாகிவிட; நெடுங் கைகள் சுமந்து - (தன்னுடைய) நீண்ட கைகளையுயர்த்திக்கொண்டு; நெடு வான் உற - (தனது) பெரிய உருவம் விரிந்த ஆகாய முழுவதும் நிறையும்படி, நிமிர்ந்தான் - மேலோங்கினான்.
அனுமன் மற்றவர்க்கு அபயமளித்துச் சிரித்தவாறு ஆண்சிங்கம் போலக் கிளம்பிப் பிலம் முதல் ஆகாயம்வரை ஒரேவழியாகத் திறக்குமாறு தன் கைகளைத் தூக்கிக் கொண்டு பேருருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பது. நாறுதல்: தோன்றுதல். ஆண்சிங்கம் போன்று பேருருக்கொண்டு எழுந்ததிலிருந்து இவன் அரிய செயல்களையும் எளிதாய் இயற்ற வல்லவன் என்ற அவனது பெருமை கூறப்பெற்றது. மடங்கல்: பிடரிமயிர் மடங்கப் பெற்றிருப்பது என்று சிங்கத்திற்குக் காரணக்குறி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Speaking the words "Do not tremble," a smile breaking on his face,
- he rose up like a lion, and so that the wide cave, unconfined,
- opened at its top and became one with the world of the sky, which even clouds cannot climb,
- he lifted his long arms on high and stretched up until he touched the vast heavens.
What the poem says
Aṉumaṉ reassures his companions, then grows to a giant size, pushing upward with raised arms until the roof of the cavern splits open all the way to the sky. The lion image stresses ease and power: what is impossible for others he does with a smile. The word used for lion literally means "the one with a folded mane."