கம்பராமாயணம் 4680 · கிட்கிந்தா 13.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மருத்து மகன் - வாயு மகனான அனுமன்; எருத்து உயர் சுடர் புயம் இரண்டும் - பிடரியின் இருபுறமும் உயர்ந்த ஒளியையுடைய கைகள் இரண்டும்; எயிறு என்ன - இரண்டு வளைந்த தந்தம்போல விளங்க; நிமிர் கண்ணின் எதிர் - சிறந்த கண்ணெதிரே; கண்டவர் - நேரில் பார்த்தவர்; கருத்தின் கலங்க - நெஞ்சம் கலங்கும்படி; இப்படி இடந்து உற - இந்தப் பிலத்தின் மேல்தளத்தைப் பிளந்து கொண்டு; வளர்ந்தான் - உயர்ந்தவனாய், உலகு உருத்து எடுத்த - பூமியை (அந்த நாளில்) சினங்கொண்டு (தன் கோரத் தந்தங்களால்) பாதலத்திலிருந்து தூக்கி வந்த; கரு மாவினையும் - பெரிய வடிவமுடைய கரிய வராகத்தையும்; ஒத்தான் - ஒத்து விளங்கினான்.
அனுமன், தன் இரு கைகளும் தந்தம் போல் விளங்க நிலத்துள்ளிருந்த பிலத்திலிருந்து பார்த்தவர் கலங்குமாறு நிலத்தைப் பிளந்து வெளிவந்த தோற்றத்தால், பாதலத்தில் அழுந்திக் கிடந்த பூமியைத் தன் கோரத் தந்தங்களால் குத்தி எடுத்துக் கொண்டு வெளிவந்த திருமாலின் வராக அவதார வடிவத்தைப் போன்றிருந்தான் என்பது. மா: விலங்கின் பொதுப்பெயர்; இங்கே வராகத்தைக் (பன்றி) குறித்தது. உருத்தல்: சினங்கொள்ளுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His two shining arms raised high beside his neck like a pair of tusks,
- the son of the Wind burst up through the cave in this way and grew,
- so that all who saw him before their eyes were shaken to the heart;
- he was like the great dark Boar that in fury lifted up the earth.
What the poem says
As Aṉumaṉ breaks out of the underground cavern with his arms raised like tusks, the poet compares him to Viṣṇu's Boar incarnation, who dived into the netherworld and brought the sunken earth back up on his tusks. The shape of the image matches: a huge dark form rising out of the ground, carrying the earth above it.