கம்பராமாயணம் 4681 · கிட்கிந்தா 13.70

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மா வடிவுடைக் கமல நான்முகன் - சிறந்த வடிவமுடைய (திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த) பிரமன்; வகுக்கும் - படைத்துள்ள; தூ வடிவுடை - தூய்மையான தோற்றமுடைய; சுடர் கொள் விண் - (சூரியன் முதலிய) சுடர்களைத் தன்னிடம் கொண்ட ஆகாயத்தினது; தலை - உச்சிமுகட்டை; தொளைக்கும் - துளைத்து ஊடுருவிச் சென்றதாகிய; மூ அடி குறித்து முறை ஈர்அடி முடித்தான் - (வாமனனாகி மகாபலியிடம்) மூன்றடி மண் இரந்து பெற்று, உடனே முறையாக (வானம் பூமி என்ற இரண்டையும்) தன் இரண்டடிகளால் அளந்து நின்ற (திரிவிக்கிரமனான) திருமாலின்; பூ வடிவுடை - அழகிய வடிவையுடைய; பொருவு இல் சேவடி - ஒப்பற்ற சிவந்த திருவடிகளை; புரைந்தான் - ஒத்து விளங்கினான்.

இப்பாட்டில் திருமாலின் திரிவிக்ரமாவதாரத்தை ஒப்பாகக் கூறினார். மாவலியிடம் மூவடி மண் வேண்டி ஈரடிகளால் மண்ணும் விண்ணும் அளந்த வரலாறு இங்கே குறிக்கப்பட்டுள்ளது. தூவடிவுடைச் சுடர்கொள்விண்: நிர்மலமானதும், சூரிய சந்திரர்களான சுடர்கள் சஞ்சரிக்கப் பெற்றதுமான ஆகாயம். புரைதல்: ஒத்தல். அனுமனுக்குத் 'திருவடி' என்ற பெயர் உண்டாதலால் இங்கு வேறு வகையாகத் திருமாலின் சேவடி போன்றவன் என்று நயம்பட உரைத்தார் என நயம் காண்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Piercing the summit of the pure, light-filled sky
  2. that the four-faced god of the lotus, of glorious form, created,
  3. he resembled the flawless red feet, lovely as flowers, of the one
  4. who asked for three steps and in due order finished with two.

What the poem says

A second Viṣṇu comparison: the dwarf Vāmana asked King Mahābali for three paces of land, then grew vast and spanned earth and heaven in two strides. Aṉumaṉ, now towering through the sky, resembles that cosmic foot. There is a pun as well, since Aṉumaṉ is traditionally called Tiruvaṭi, "the Holy Feet."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā vaṭivuṭaik kamala nāṉmukaṉ vakukkum
tū vaṭivuṭaic cuṭar koḷ viṇ talai toḷaikkum
mū aṭi kuṟittu muṟai īr aṭi muṭittāṉ
pū vaṭivuṭaip poruvu il cēvaṭi puraintāṉ.