கம்பராமாயணம் 4682 · கிட்கிந்தா 13.71

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏழ் இருபது ஓசனை இடந்து படியின் மேல்
ஊழ் உற எழுந்ததனை உம்பரும் ஒடுங்கப்
பாழிநெடு வன் பிலனுள் நின்று படர் மேல்பால்
ஆழியில் எறிந்து அனுமன் மேகம் என ஆர்த்தான்.

பொருள் · Meaning in Tamil

அனுமன் - அனுமன்; ஏழ்இருபது ஓசனை இடந்து - நூற்று நாற்பது யோசனை தூரம் பிளந்துகொண்டு; பாழி நெடு வன் பிலனுள் நின்று - உள்ளாழ்ந்த நெடிய வலிய பிலத்திலிருந்து; படியின்மேல் ஊழ் உற எழுந்து - பூமி மட்டத்திற்கு முறையே எழுந்துவந்து; (பின்பு) அதனை - அந்தப் பில நகரத்தை; உம்பரும் ஒடுங்க - தேவர்களும் அஞ்சி நடுக்கமடைய, படர்மேல்பால் ஆழியின் எறிந்து - பரவிய மேற்குத்திசைக் கடலில் வீசியெறிந்து; ஆழி என ஆர்த்தான் - அலை கடல்போலப் பேராரவாரம் செய்தான்.

அனுமன் பிலத்தைப் பிளந்து வெளிவந்து பயனில்லாமல் கிடந்த அந்தப் பிலநகரத்தை மேற்குக் கடலிலெறிந்து ஆரவாரம் செய்தான் என்பது. அனுமனின் அப்பொழுதைய நிலையைக் கண்டு தமக்கு என்ன தீங்குவருமோ என்று தேவர்களும் அஞ்சி நடுங்குவாராயினர் என்றார். ஊழுற எழுந்து: முறையாக வருத்தமில்லாமல் கிளம்பி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Splitting a hundred and forty leagues, he rose
  2. in due order above the surface of the earth, and, so that even the gods shrank in fear,
  3. from that deep, long, mighty cave he took it and flung it
  4. into the wide western ocean, and Aṉumaṉ roared like a storm cloud.

What the poem says

Having torn the cavern open, Aṉumaṉ hurls the now useless underground city into the western sea and gives a thunderous roar. Even the gods tremble, unsure what such power might do next. "Seven twenties" of yojanas is the poet's measure of the cave's depth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēḻ irupatu ōcaṉai iṭantu paṭiyiṉmēl
ūḻuṟa eḻuntu ataṉai umparum oṭuṅka
pāḻi neṭu vaṉ pilaṉuḷ niṉṟu paṭar mēlpāl
āḻiyiṉ eṟintu aṉumaṉ mēkam eṉa ārttāṉ.