கம்பராமாயணம் 4684 · கிட்கிந்தா 13.73

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாருதி வலித்தகையை பேசி மறவோரும்
பார் இடை நடந்து பகல் எல்லை படரப் போய்
நீருடைய பொய்கையினின் நீள்கரை அடைந்தார்
தேருடை நெடுந்தகையும் மேலைமலை சென்றான்.

பொருள் · Meaning in Tamil

மறவோரும் - வலிமையுள்ள வானர வீரர்களும்; மாருதி வலித் தகைமை பேச - அனுமனது வலிமையின் தன்மையைப் புகழ்ந்து கூறிக் கொண்டு; பகல் எல்லை படர - அன்றைய பகல்முழுவதும்; பாரிடை நடந்துபோய் - பூமியில் நடந்து சென்று; நீருடைய பொய்கையினின் - நீர் நிரம்பிய ஒரு தடாகத்தின்; நீள் கரை அடைந்தார் - நீண்ட கரையை அடைந்து தங்கினார்கள் (அப்பொழுது); தேருடை நெடுந்தகையும் - (வானத்தில் செல்லும்) தேரையுடைய பெருந்தகையான சூரியனும்; மேலை மலை சென்றான் - மேற்குத் திசையிலுள்ள அத்தமனகிரியை அடைந்தான் (மறைந்தான்).

பிலத்தில் இருட்பிழம்பிலகப்பட்டுத் திகைத்த போது தங்களுக்கு வழிகாட்டிக் காத்ததனாலும், பின்பு பிலத்தை இடித்துச் சுயம்பிரபைக்கும் தங்களுக்கும் வெளியே செல்லும் வழியைக் காட்டியதாலும் வானர வீரர் அனுமனின் வலிமையைப் புகழ்ந்தார்கள் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The warriors too, speaking of the nature of Māruti's strength,
  2. walked on over the earth while the length of the day passed,
  3. and reached the long bank of a pool full of water;
  4. and the great one with the chariot went to the western mountain.

What the poem says

Praising Aṉumaṉ, who guided them in the dark and then broke them out of the cave, the monkeys travel all day and reach a lake. As they arrive, the sun, the god who drives a chariot across the sky, sets behind the western mountain. This verse closes the episode of the cavern.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māruti valit takaimai pēca maṟavōrum
pāriṭai naṭantu pakal ellai paṭarap pōy
nīruṭai poykaiyiṉiṉ nīḷ karai aṭaintār
tēruṭai neṭuntakaiyum mēlai malai ceṉṟāṉ.