கம்பராமாயணம் 4696t · கிட்கிந்தா 14.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொங்கணம் ஏழும் நீங்கி - (அந்த வானர வீரர்) கொங்கண நாட்டின் ஏழு பிரிவுகளையும் கடந்து; குடகடல் - மேற்குக் கடலில் உண்டான; தரளக் குப்பை - முத்துக் குவியல்கள்; சங்கு - சங்குகள்; அணிபானல் - அழகான கருங்குவளை மலர்கள்; நெய்தல் - நெய்தற் பூக்கள்; தண்புனல் தவிர ஏக - ஆகியவை நிறைந்த குளிர்ந்த நீர்ப் பகுதிகளையுடைய நெய்தல் நிலத்தை நீங்கிச் சென்று; திங்களின் கொழுந்து சுற்றும் - பிறைச் சந்திரன் சுற்றிச் செல்லக்கூடிய; சிமய நீள் கோடு - சிகரங்களையுடைய உயரமான கொடுமுடிகளைக் கொண்டதும்; தேவர் அங்கைகள் கூப்ப நின்ற - தேவர்கள் தம் அழகிய கைகளைக் குவித்து வணங்கும்படி நிற்பதுமான; அருந்ததிக்கு - அருந்ததி என்னும் மலைக்கு, அருகர் ஆனார் - அருகில் போய்ச் சேர்ந்தார்கள்.
வானரவீரர்கள் ஏழு பிரிவுகளையுடைய கொங்கண தேசத்தையும், மேற்குத் திசையிலுள்ள நெய்தல் நிலங்களையும் தாண்டி மிக உயர்ந்துள்ள அருந்ததிமலையைச் சேர்ந்தார்கள் என்பது. கொங்கணம்: மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த வடகன்னடம் என்னும் மாவட்டத்தது. தேவர் அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததி: உயர்வு நவிற்சியணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Leaving all seven Koṅkaṇas, and passing beyond the cool waters
- of the western sea, with its heaps of pearls,
- its conches, lovely dark lilies and white water-lilies, they went on
- and came near Aruntati, where the gods stand with joined palms, whose tall peaks the crescent moon circles.
What the poem says
The monkeys cross the seven divisions of the Konkan and the coastal shore country with its pearls, conches and lilies, and reach Mount Aruntati, so high that the moon circles its peaks and the gods worship it. That last detail is deliberate exaggeration.