கம்பராமாயணம் 4696s · கிட்கிந்தா 14.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுரும்பொடு தேனும் வண்டும் - பொன்வண்டு, தேன்வண்டு, கருவண்டு என்னும் பலவகையான வண்டுகளும்; அன்னமும் - அன்னப் பறவைகளும்; துவன்றி - நெருங்க; புள்ளும் - நாரை முதலான ஏனைய பறவைகளும்; கரும்பொடு - கரும்புகளும்; செந்நெல் காடும் - செந்நெற் பயிர்களும் அடர்ந்த நன்செய் இடங்களும்; கமல வாவிகளும் - தாமரைத் தடாகங்களும்; மல்கி - நிறைந்து; பெரும்புனல் மருதம் சூழ்ந்த - மிக்க நீர்வளங் கொண்ட மருதநிலம் சூழ்ந்துள்ள; கிடக்கை பின் கிடைக்க - இடங்கள் தம் பின்னால் கிடக்கும்படி; சென்றார் - அப்பால் கடந்து சென்றனர் அந்த வானரவீரர்கள்; நீர்க் குரும்பை - இளநீர்க் காய்கள்; முரஞ்சும் சோலைக் குலிந்தமும் - நிரம்பிய தென்னஞ்சோலைகளையுடைய குலிந்த நாட்டையும், புறத்துக் கொண்டார் - (தமது) பின்புறத்ததாகும்படி முன்னேறிச் சென்றார்கள்.
மருதநிலம்: அன்னம் முதலிய பறவைகளையும், செந்நெல் முதலிய உணவு வகைகளையும் தாமரை மலர்களையும், பொய்கைகளையும் தன்னிடத்தே கொண்டது; வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் மருதம் ஆகும். சுரும்பு, தேன், வண்டு: வண்டுகளின் வகைகளைக் குறிக்கும் சொற்கள்; சுரும்பு: எல்லா மணத்திலும் செல்வது எனவும் தேன், வண்டு: நன்மணத்தே செல்வன எனவும் கூறுவர். இச் செய்யுளில் நிலம், நீர், பூ, பறவை, மரம் முதலியவற்றால் குலிந்த நாட்டின் மருத வளம் கூறப் பெற்றது. குரும்பை: தெங்கு, பனை ஆகிய மரங்களின் இளங்காய். குலிந்தம்: இக் குலிந்த நாடு கேரள நாட்டின் வடக்கே மேற்கடற்கரையையடுத்துள்ளதாகவும் த ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்றெனவும் கூறுவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thronged with bees of many kinds and swans, with other birds,
- full of sugarcane and stands of red paddy and lotus ponds,
- the fertile river plains rich in water they left behind as they went;
- and Kulintam too, with groves heavy with tender coconuts, they put behind them.
What the poem says
The monkeys cross the lush farmland of the Kulinda country: lotus pools, rice and sugarcane, birds and bees everywhere, and coconut groves. The verse runs through all the classic markers of marutam, the poetic landscape of river plains and paddy fields. Kulindam is said to lie on the west coast north of Kerala.