கம்பராமாயணம் 4696r · கிட்கிந்தா 14.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இன்ன தீது இலாத - இன்னது நல்லது; (இன்ன) தீது என்று - இன்னது கெட்டது என்று; யாவையும் எண்ணும் கோளார் - எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் தன்மையுடைய வானரவீரர்; அந் நதி முழுதும் நாடி - அந்தக் கோதாவரி நதிப் பகுதி முழுவதும் தேடிப் பார்த்து; ஆய்வளை மயிலை - சிறந்த வளையல்களையணிந்த மயில் போன்ற சீதையை, யாண்டும் சந்நிதி உற்றிலாதார் - எதிரில் காணப் பெறாத அவர்கள்; நெடிது பின் தவிரச் சென்றார் - நீண்ட வழி பின்னால் கழியுமாறு முன்னேறிச் சென்றவர்களாய்; சொன்ன தீவினைகள் - நூல்களில் கூறிய பாவங்களையெல்லாம்; தீர்க்கும் சுவணகத் துறையில் - (தன்னில் படிவோர்க்குப்) பாவத்தைப் போக்குகின்ற சுவணக (சோணை) நதியிடத்தில்; புக்கார் - சென்று சேர்ந்தார்கள்.
ஆய்வளை மயில்: அடையடுத்த உவமையாகுபெயர். சந்நிதி: வடசொல்லின் திரிபு - எதிரேகாணல். சுவணகம்: ஒரு நதி; சோணம், சோணை எனவும் வழங்கப் பெறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They searched that whole river, and the peacock with fine bangles
- they did not meet anywhere; they went on, leaving a long way behind;
- those who weigh everything, saying "this is good, this is harmful,"
- entered the Cuvaṇakam ghat, which removes the sins the scriptures name.
What the poem says
Having searched the whole Godāvarī region in vain, the monkeys, who know how to tell right from wrong, travel on to the ghat of the Cuvaṇakam, a river also called Śoṇa, whose waters are said to wash away sin. "The peacock with fine bangles" is Cītai.