கம்பராமாயணம் 4696q · கிட்கிந்தா 14.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காசொடு கனகம் தூவி - இரத்தினங்களொடு பொன்னையும் தன் அலைகளால் கொழித்துக் கொண்டு; கவின் உறக் கிடந்த கான் யாறு - அழகாக ஓடிப் பல காடுகளிடையே செல்லும் அந்த கோதாவரி நதி; ஆசு இல் பேருலகில் - குற்றமற்ற பெரிய இந்த நிலவுலகத்தில்; காண்போர் - அதனைக் காண்பவர்க்கு; அளவை நூல் எனலும் ஆக - தருக்க சாத்திரம் போல விளங்கி; எருவை வேந்தன் - கழுகுகளுக்கு அரசனான சடாயு; ஏசு இல் போர் அரக்கன் - பழிப்புக்கிடமில்லாத போரில் சிறந்த அரக்கனாகிய இராவணனது; மார்பின் இடை - மார்பிலிருந்து; பறித்து வீசிய - பிடுங்கி அலகால் வீசியெறிந்து; மீக் கோள் வடகம் ஈது என - மேலே அணியப் பெற்ற இரத்தினமாலையோ இது என்று சொல்லத்தக்கதாய்; விளங்கிற்று - விளங்கியது.
அன்று, ஏ: ஈற்றசைகள். கோதாவரி நதி பூமியையளக்கக்கூடிய அளவை நூல் போலவும், கழுகரசனான சடாயு, சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனோடு போர் செய்கையில் அவனது மார்பிலிருந்து கழற்றியெறிந்த முத்தாரம் போலவும் விளங்கியது என்பது. வடகம் - வடம் என்பதன் விரித்தல் விகாரம். கோதாவரிக்குத் தருக்க நூல் உவமம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the science of reasoning to those who view this flawless great world,
- the forest river, scattering gems and gold, lay in its beauty
- and shone as if it were the necklace that the king of vultures
- tore from the chest of the faultless warrior demon and flung away.
What the poem says
Two images for the Godāvarī. It measures and orders the land the way logic orders thought. And it glitters like the jewelled necklace that Caṭāyu, king of the vultures, ripped from Irāvaṇaṉ's chest when he fought to stop the abduction of Cītai.