கம்பராமாயணம் 4696p · கிட்கிந்தா 14.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எழுகின்ற திரையிற்று ஆகி - மேலெழுந்து வீசியெறியும் அலைகளையுடையதாக; இழிகின்ற - பெருகி வருகின்ற; மணி நீர் யாறு - (நீலமணி போல) தெளிந்த நீரையுடைய அந்தக் கோதாவரி நதி; தொழுகின்ற சனகன் - யாவராலும் வணங்கப்படுகின்ற பெருமையுள்ள சனக மன்னன்; வேள்வி தொடங்கி - யாகத்தைத் தொடங்கிச் செய்யும் பொருட்டு; சுருதிச் சொல்லால் - வேத மந்திரங்களைச் சொல்லி; உழுகின்ற பொழுதின் - (கலப்பையால்) உழுகின்ற காலத்தில்; ஈன்ற - உழுபடைச்சாலின் வழியே (பூமி) பெற்றெடுத்த; ஒரு மகட்கு - ஒப்பற்ற அந்தச் சீதைக்காக; இரங்கி - (இராவணனால் ஏற்பட்ட) துன்பத்திற்கு மனம் வருந்தி; ஞாலம் - (அவளை ஈன்ற தாயான) பூமிதேவி; அழுகின்ற - அழுவதாலுண்டான; கலுழிமாரி ஆம் என - கலங்கலான கண்ணீர்ப் பெருக்கைப் போல; பொலிந்தது - விளங்கியது.
அன்று, ஏ: ஈற்றசைகள். நிறைந்து பெருகக் கூடிய கோதாவரிநதியை பூமி தேவி தான் பெற்ற மகளான சீதைக்கு இராவணனால் நேர்ந்த வருத்தத்திற்காக இரக்கப்பட்டுப் பெருக்கும் கண்ணீர்போலுமென வருணித்தார். தன்மைத் தற்குறிப்பேற்றவணி. சனக மன்னன் அறிவிற் சிறந்த ஞானயோகியாதலால், யோகியர்களும், பெரியோர்களும் தொழுவதற்குரிய சிறப்புப் பெற்றவன்; அதனால் 'தொழுகின்ற சனகன்' எனப்பட்டான். யாகம் செய்பவர் முதலில் வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு கலப்பையால் உழுது அங்கு யாகசாலையை அமைப்பது முறையாகும். சீதை: சீதா என்னும் வடசொல் படைச்சால் என்னும் பொருளுடையது; காரணப் பெயர்.
உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற புவிமடந்தை திருமடந்தை வெளிப்பட்டென. . . . தோன்றினாள்
(682) என முன்பு கூறியதை நினைவு கூர்க. கலுழி: கலங்கல் நீர். வினை முடிவு: யாறு பொலிந்தது என இயைத்துப் பொருள் முடிவு கொள்ள வேண்டும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With its rising waves, that river of jewel-clear water flowing down
- shone like a muddy flood of tears wept by the Earth,
- grieving for the one daughter she bore when revered Caṉakaṉ,
- beginning his sacrifice, ploughed the ground to the chanting of the Veda.
What the poem says
Cītai was found by King Caṉakaṉ in a furrow as he ploughed the ground for a sacrifice, so she is the daughter of the Earth. The poet imagines the swollen Godāvarī as the Earth's tears for her abducted child. The name Sītā itself means "furrow." The commentary recalls an earlier verse in the epic describing her emergence from the ploughed earth.