கம்பராமாயணம் 4696o · கிட்கிந்தா 14.27

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊதைபோல் விசையின் - காற்றைப் போல வேகத்தைக் கொண்ட; வெங் கண் - (சினத்தால்) கொடுமையான பார்வையுடைய; உழுவைபோல் வயவர் - புலிபோன்ற வலிமையுள்ள அந்த வானர வீரர்; ஓங்கல் ஆதியை - அந்தப் பாண்டு மலையின் அடிவாரத்தை; அகன்று செல்வார் - நீங்கி அப்பாலே செல்பவர்களாக; அரக்கனால் வஞ்சிப்பு உண்ட - இராவணனால் வஞ்சித்துக் கவரப்பட்டு; சீதை போகின்றாள் - செல்லுகின்ற சீதையினது; கூந்தல் வழீஇ வந்து - கூந்தலிலிருந்து நழுவி வந்து; புவனம் சேர்ந்த - பூமியையடைந்த; கோதை போல் கிடந்த - மலர்மாலை போல விளங்கிய; கோதாவரியினை - கோதாவரி என்னும் ஆற்றை, குறுகிச் சென்றார் - நெருங்கிச் சேர்ந்தார்கள்.

உயரமான இடத்திலேறிக் காண்பவர்க்கு ஆறுகள் வெண்மையான மலர் மாலைபோலத் தோன்றுமாதலால் கோதாவரி நதியை இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும்போது அவளது கூந்தலிலிருந்து நழுவிக் கீழே விழுந்த மலர் மாலை போலுமென்று வருணித்தார். ஊதை: சீறி வீசுவதால் வேகத்திற்கு உவமை. வழீஇ: சொல்லிசையளபெடை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Swift as the wind, mighty as fierce-eyed tigers,
  2. they left the foot of the mountain and went on, and came near
  3. the Kōtāvari, lying like a garland that slipped from the hair
  4. of Cītai as she was carried off, deceived by the demon, and fell to earth.

What the poem says

Seen from the heights, a river looks like a white garland. So the poet imagines the Godāvarī as a garland that slipped from Cītai's hair as Irāvaṇaṉ carried her away through the sky, a touching reminder of the woman the monkeys are seeking.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūtaipōl vicaiyiṉ, veṅ kaṇ uḻuvai pōl vayavar, ōṅkal
ātiyai akaṉṟu celvār; arakkaṉāl vañcippuṇṭa
cītai pōkiṉṟāḷ kūntal vaḻīi vantu, puvaṉam cērnta
kōtaipōl kiṭanta kōtāvariyiṉaik kuṟukic ceṉṟār.