கம்பராமாயணம் 4696n · கிட்கிந்தா 14.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(வானர வீரர்) விண் உற நிவந்த - வானத்தைப் பொருந்தும்படி உயர்ந்த; சோதி - ஒளியையுடைய; வெள்ளிய குன்றம் மேவி - வெண்ணிறமான அந்தப் பாண்டுமலையைப் பொருந்தி; கண்ணுற நோக்கலுற்றார் - (அங்கே) சீதையைக் காண்பதற்கு ஆர்வத்தோடு தேடத் தொடங்கியவர்களாகிய, களி உற - மகிழ்ச்சியடையுமாறு; கனிந்த - முற்றிய; காமர் பண் உறு - விரும்பத் தகுந்த இசைப் பாடல் போன்ற; கிளவிச் செவ்வாய் - இனிய சொற்களைப் பேசும் சிவந்த வாயையும்; படை உறும் நோக்கினாளை - வேற்படை போன்ற கண்களையுமுடைய சீதையை; எண்ணுறு திறத்தும் - தாம் கருதிப் பார்த்த இடங்களிலெல்லாம்; காணார் - காணவில்லை; இடர் உறு மனத்தர் - துயரம் பொருந்திய மனத்தையுடையவராய்; எய்த்தார் - தளர்வுற்றார்கள்.
காமர்: காமம் மரு என்பதன் மரூஉ. உறு: (இங்கே) உவமவுருபு. அந்தப் பாண்டுமலையின் பல இடங்களில் தேடியும் சீதையைக் காணாமையால் அவ் வானரவீரர்கள் தளர்ந்தார்கள் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Climbing the bright white mountain that rose to touch the sky,
- they set out to search with eager eyes, but the one
- with red lips speaking words like ripe, delightful music, with eyes like weapons,
- they did not find, in any place they thought of; sick at heart, they grew weary.
What the poem says
The monkeys search Mount Pāṇṭu thoroughly, but Cītai, whose speech is like sweet music and whose eyes are sharp as spears, is nowhere to be found. Discouraged and tired, they must go on.