கம்பராமாயணம் 4696m · கிட்கிந்தா 14.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இருள் உறுத்து - (அந்தப் பாண்டு மலை) (உலகில்) பரவிய இருட்டைத் தாக்கியொழித்து, மீது எழுந்த - வானத்தில் தோன்றிய; தெண் நிலா - தெளிந்த ஒளியையுடைய சந்திரனுக்கு; மருள் உறுத்து - மயக்கத்தை உண்டாக்கி; வண்சுடர் வழங்கலால் - செழுமையான மிக்க ஒளியை வீசுவதால்; அருள் உறுத்திலா - (மனத்தில் சிறிதும்) அருளைக் கொள்ளாத; அடல் அரக்கன்மேல் - வலிய அரக்கனான இராவணன்மீது; உருள் உறுத்த - (அவன் கீழே விழுந்து) உருளுமாறு அழுத்திய; திண் கயிலை - வலிய கயிலாய மலையை, ஒத்தது - ஒத்து விளங்கியது.
ஆல்: ஈற்றசை. தன் வெண்ணிலவால் உலகத்து இருளைப் போக்கும் சந்திரனுக்கும் மயக்கத்தையுண்டாக்குவதெனப் பாண்டு மலையின் வெண்ணிறவொளியைச் சிறப்பித்துக் கூறியது. இவ்வாறு வெள்ளொளி மிகுந்திருப்பதால் பாண்டுமலைக்குக் கைலாய மலையை உவமை கூறினார். கயிலைக்கு ஏற்றங் கூறிய ஆசிரியர் வலிய அரக்கனும், இந்தச் சரிதத் தொடர்பான கொடியவனுமான இராவணனைத் தன் கீழே கிடத்தி அழுத்திய மலையெனச் சிறப்பித்த நயங் காணலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Striking down the darkness, confounding the clear moon
- that had risen above, and shedding rich radiance,
- it was like strong Kailāsa that pressed down and set rolling
- the mighty demon whose heart held no mercy.
What the poem says
The white mountain glows so brightly that it bewilders even the moon. Its whiteness recalls Kailāsa, Śiva's mountain, and the poet adds the famous story of how Kailāsa crushed Irāvaṇaṉ when he tried to lift it, a nod to the villain of this very epic.