கம்பராமாயணம் 4696l · கிட்கிந்தா 14.24

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீண்ட மேனியான் - திருவிக்கிரமனாய் நீண்ட வடிவெடுத்த திருமாலின்; நெடிய தாளினின்று - பெரிய திருவடியிலிருந்து; ஈண்டு - இவ்விடத்தில்தான்; கங்கை வந்து இழிவது என்னலாம் - ஆகாய கங்கை வந்து விழுகின்றதோ என்று சொல்லும்படியாக; அம் பாண்டு மலை - அழகான பாண்டு மலையினது; படர் விசும்பினை - பரவிய ஆகாயத்தை; தீண்டுகின்ற - தொடுவதாய் உயர்ந்துள்ள; தண் சிகரம் - குளிர்ந்த சிகரத்தை; எய்தினார் - (அவ் வானர வீரர்) போய்ச் சேர்ந்தார்கள்.

தனது சிகரம் வானத்தில் படியுமாறு ஓங்கியுள்ள வெண்மையான பாண்டுமலை, காண்பவர்களுக்குத் திருமாலின் திருவடியிலுதித்த வெண்ணிறக் கங்கையாறு வானத்திலிருந்து இங்கேதான் இறங்குகின்றதோ என்று நினைக்குமாறு தோன்றுமென்பது. தற்குறிப்பேற்றவணி. திருமால் உலகளந்த காலத்து மேலே சத்திய லோகத்திற்குச் சென்ற அந்தப் பிரானின் திருவடியைப் பிரமன் தன் கைக் கமண்டல நீரால் கழுவி விளக்க அந்தப் டது புனிதநீரே கங்கையாகப் பெருகிற்று என்பது வரலாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One might say, "Here the Gaṅgā comes down
  2. from the long foot of the one whose body grew tall";
  3. so they reached the cool peak of the lovely Pāṇṭu mountain
  4. that touches the spreading sky.

What the poem says

The monkeys reach the white peak of Mount Pāṇṭu, so high and so pale that it looks like the heavenly Gaṅgā pouring down at that very spot. The story behind the image: when Viṣṇu as Trivikrama strode up to Brahmā's world, Brahmā washed his foot with water from his pot, and that holy water became the Gaṅgā. The poet presents his own fancy as the cause, a recognised figure of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīṇṭa mēṉiyāṉ, neṭiya tāḷiṉniṉṟu
īṇṭu kaṅkai vantu iḻivatu eṉṉal ām,
pāṇṭu am malaip paṭar vicumpiṉait
tīṇṭukiṉṟa taṇ cikaram eytiṉār.