கம்பராமாயணம் 4696v · கிட்கிந்தா 14.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முனைவரும் - (வேங்கடமலையில்) மாமுனிவர்களும்; மறை வலோரும் - வேதமறிந்த அந்தணர்களும்; முந்தை நாள் - முற்பிறப்பிலே; சிந்தை மூண்ட - மனம் மேலிட்டுச்செய்த; வினைவரும் நெறியை மாற்றும் - தீவினைகளின் பயனாகத் தொடர்ந்து வரும் அல் வழியை மாற்றி நல்வழியில் திருப்பவல்ல; மெய் உணர்வோரும் - தத்துவ ஞானிகளும்; விண்ணோர் எனைவரும் - தேவர்கள் எல்லோரும்; அமரர் மாதர் யாவரும் - தெய்வப் பெண்கள் யாவரும்; சித்தர் என்போர் அனைவரும் - தேவரில் ஒரு வகையினரான சித்தர்கள் எல்லோரும்; அருவி நல்நீர் - (அம் மலையிலுள்ள) அருவியின் தூய்மையான புண்ணிய தீர்த்தங்களில்; நாளும் - ஒவ்வொரு நாளும்; வந்து ஆடுகின்றார் - வந்து நீராடுகின்றார்கள்.
முனிவர் முதலான இவ்வுலகத்தவரும், தேவகணங்களாகிய மேலுலகத்தவரும் வந்து நீராடுவதற்குரிய பெருமை மிக்க அருவிகளாலாகிய பல புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டுள்ளது திருவேங்கடமலையென்பது. அங்குள்ள தீர்த்தங்கள்: கோனேரி, ஆகாய கங்கை, பாபவிநாசம், பாண்டவ தீர்த்தம், குமாரதாரை, தும்புரு தீர்த்தம், ஆழ்வார் ண் ஆகியன. சித்தர்: பதினெண்கணத்துத் தேவர்களில் ஒரு வகையினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Great sages, masters of the Veda, and those of true knowledge
- who turn aside the path down which deeds driven by the mind in former days arrive,
- all the gods, every one of the celestial women, and all
- those called Siddhas come every day to bathe in its good waterfall streams.
What the poem says
A description of Vēṅkaṭam, the sacred hill. Sages, Vedic scholars, the enlightened who can turn aside the fruits of past karma, gods, celestial women and Siddhas all come daily to bathe in its holy waterfalls. The commentary lists several of the hill's famous sacred pools, such as Kōṉēri and Pāpavināśam.