கம்பராமாயணம் 4696w · கிட்கிந்தா 14.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அந்த மலையில்) தேவர் - தேவர்கள்; பெய்த ஐம்பொறியும் - (தமது உடம்பில்) பொருந்திய மெய் முதலாய ஐந்து பொறிகளையும்; பெருங் காமமும் - ஐம்புலன்களால் விளையும் பெரிய காம உணர்ச்சியையும், வைத வெஞ்சொலின் - (பிறர் தம்மை) ஏசிய கொடிய சொற்களையும்; மங்கையர் வாட்கணின் - மகளிரின் வாள் போன்ற கொடிய கண்களால்; எய்த - தூண்டிய; வஞ்சக வாளியும் - வஞ்சகத் தன்மையுள்ள பார்வையாகிய அம்புகளையும்; வென்று - (எளிதிலே) வெற்றிகண்டு; செய் நல் தவம் பல - செய்யத்தக்க அரிய தவங்கள் பலவற்றை; செய்குநர் - செய்கின்றார்கள்.
ஆல்: ஈற்றசை. தேவர்கள் அந்தத் திருவேங்கட மலைக்கு வந்து ஐம்பொறிகளையும் அடக்கிக் காமவேதனையிலலால் பிறர் தம்மை ஏசினாலும் பழியே பேசினாலும் பொறுத்துப் பெண்களை மனத்தாலுங் கருதாமல் பல தவங்களைச் செய்கின்றார்கள் என்பது. அழிவு நோக்கி வீழ்வதை அறிய முடியாமல் மயக்குதலின் காமப் பார்வையை வஞ்சக வாளி என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The five senses lodged in the body, and great desire,
- and harsh words of abuse, and the treacherous arrows
- shot from the sword-sharp eyes of women: these the gods
- have conquered there, and perform many good austerities.
What the poem says
On this holy hill even the gods practise penance: they master their senses, rise above desire, bear insults patiently, and stay unmoved by women's glances. Those glances are called treacherous arrows because they wound without the victim knowing he is falling.