கம்பராமாயணம் 4696x · கிட்கிந்தா 14.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வலம் கொள் நேமி - வெற்றி கொள்ளும் சுதரிசனம் என்ற சக்கராயுதத்தைக் கையில் கொண்ட; மழை நிற வானவன் - கார் மேகம் போன்ற கருநிறத்தையுடைய கடவுளான திருவேங்கடவனது; அலங்கு தாள் இணை - விளங்குகின்ற இரண்டு திருவடிகளையும், தாங்கிய - தாங்கி நின்ற; அம்மலை - அத் திருவேங்கடமலையில் வாழ்கின்ற; விலங்கும் - மிருகங்களும்; வீடு உறுகின்றன - மோட்சத்தையடைகின்றன (அவ்வாறானால்); மெய்ந் நெறி புலன் கொள்வார்கட்கு - உண்மை நெறியான தவ நியமங்களில் தன் மனத்தைச் செலுத்தும் யோகியர் முதலோர்க்கு, அனையது - அந்த மோட்சமானது; பொய்க்குமோ - கிடைக்காமல் தவறிப் போகுமோ? (தவறிப் போகாது).
மிகப் பெருஞ்சிறப்பு வாய்ந்த அத் திருவேங்கட மலையில் வாழும் மிருகங்களும் வீட்டுலகத்தையடையுமென்றால் தவவொழுக்கங்களில் நடக்கின்ற யோகியர் முதலோர்க்கு அந்த வீட்டுலகம் கிடைப்பது தவறுமோ என்பது. விலங்கும்: உம்மை இழிவுசிறப்பு. திருவேங்கடமலை வீட்டுப் பதவியைத் தவறாது அளிக்கவல்லதாகையால்தான் 'எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே' (பெருமாள் திருமொழி 4 : 10) என்றார் குலசேகராழ்வார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On that hill which bears the two shining feet
- of the god coloured like rain clouds, who holds the victorious discus,
- even the beasts attain liberation; how then could that fail
- for those who set their minds on the true path?
What the poem says
Vēṅkaṭam bears the feet of Viṣṇu, worshipped there as Lord Veṅkaṭēśa, so even the animals living on it reach liberation; ascetics surely will. The commentary cites the Vaiṣṇava saint Kulacēkara Āḻvār, who longed to be reborn as anything at all on that golden hill.