கம்பராமாயணம் 4696y · கிட்கிந்தா 14.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆய குன்றினை - (வானரவீரர்) அத்தகைய தூய்மையும் சிறப்பும் அமைந்த திருவேங்கடமலையை; எய்தி - அடைந்து; அருந்தவம் மேய செல்வரை - அரிய தவத்தைப் பொருந்திய தவயோகிகளை; மேயினர் - அடைந்து; மெய்ந்நெறி நாயகன்தனை - என்றும் அழியாத மோட்சநிலைக்குத் தலைவனான திருவேங்கடநாதனை; நாளும் வணங்கிய - தினமும் வணங்கி வழிபாடு செய்த; தூய நல்தவர் - தூய்மையான சிறந்த தவத்தையுடைய அப் பெரியவர்களின்; பாதங்கள் சூடினார் - திருவடிகளைத் தம் தலைமேல் சூடி வணங்கினார்கள்.
திருவேங்கட நாதனை வணங்குகின்ற பெரும்பேறு பெற்றுள்ளவராதலால் அவர்களை 'அருந்தவமேய செல்வர்' 'தூய நல் தவர்' என்று கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Reaching that hill, they approached the holy ones
- who dwell in hard austerities, and the feet of those pure
- and good ascetics who every day worship
- the Lord of the true path, they placed upon their heads.
What the poem says
At Vēṅkaṭam the monkeys meet the ascetics who worship the god of the hill daily and bow before them, touching their heads to the sages' feet, a gesture of deep reverence.