கம்பராமாயணம் 4696z · கிட்கிந்தா 14.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேண்டு உரு மேவுவார் - விரும்பிய வடிவங்களை எடுக்கும் திறமையுடைய வானரர்கள்; சூடி - (தவயோகிகளின் திருவடிகளைத் தம்) தலையில் சூடிய பின்பு; ஆண்டு - அத் திருவேங்கட மலையில்; அச் சுரிகுழல் தோகையை - சுருண்ட கூந்தலையுடைய மயில் போன்ற சீதையை; தேடி - அங்கே தேடிப் பார்த்து(க் காணாமல்); மறைநாவலர் வேடம் மேயினர் - வேதங்களில் வல்ல அந்தணர்களின் வேடத்தைப் பூண்டவர்களாய், தெண் திரை - தெளிந்த அலைகளையுடைய; வார் புனல் - மிக்க நீர் நிறைந்த; தொண்டைநல் நாடு - சிறந்த தொண்டை நாட்டை; நண்ணுகின்றார் - சேர்பவரானார்கள்.
சுரிகுழல் தோகை: அடையடுத்த இருமடியாகு பெயர். 'தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து' என்றவாறு மிகுந்து சான்றோரை மிகுதியாகக் கொண்ட நாடாதலால் 'வார் புனல் தெண்திரைத் தொண்டை நன்னாடு' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having worn those feet on their heads, and searched there
- for the peacock with curling hair, they came to the good Toṇṭai land
- of abundant water and clear waves, taking the guise
- of men learned in the Veda, they who can take any form they wish.
What the poem says
Again failing to find Cītai, the monkeys disguise themselves as Brahmin scholars and enter Toṇṭai Nāṭu, the northern Tamil country around Kāñcipuram. The commentary quotes a traditional saying that Toṇṭai Nāṭu, with its clear-watered fields, is a land rich in wise and noble people.