கம்பராமாயணம் 4696zc · கிட்கிந்தா 14.40

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குல மள்ளர் - வேளாண் குலத்தவராய உழவர்கள்; கோல் அடிப்ப - உழும்போது உழவு எருதுகளைக் கோலினால் அடிக்கையில்; தோல் அடிக் கிளை அன்னம் - தோல் செறிந்த அடிகளையுடைய கூட்டமான அன்னப் பறவைகள்; வெரீஇ - அஞ்சி; சூல் அடிப் பலவின் - கருவை அடியிலே கொண்ட பலாமரத்தினது (வேர்ப்பலாவின்); சுளை தூங்கு தேன் - (பலாச்) சுளையிலிருந்து ஒழுகுகின்ற தேன் (பாய்ந்து); ஏர்ச்சால் அடித்தரும் - உழவுச் சாலின் இடங்களிலே முளைத்துள்ள; சாலியின் வெண்முளை - நெற்பயிரின் வெண்மையான முளைகளை, துவைப்பன - (கால்களால்) மிதித்துத் துவைப்பனவாம்.

உழவர்கள் ஏர் உழும் போது உழவு மாடுகளை அடித்துத் துரத்த பக்கத்தேயிருந்த அன்னப் பறவைகள் அதனால் அஞ்சி அண்மையில் பலாச் சுளைகளின் தேன்பாய முளைத்துள்ள வயல்களில் விரைந்தோட, அவற்றின் முளைகள் சிதையும் என்பது கருத்து. சூல்: கருப்பம்; இங்கு வேர் என்னும் பொருளது. சூல் அடிப் பலா: வேர்ப் பலா. கோல்: தாற்றுக் கோல். இச் செய்யுளில் மருத வளம் கூறப்பெற்றுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Honey dripping from the segments of root-bearing jackfruit flows,
  2. and when the farmers of good lineage strike their oxen with the goad,
  3. the swans with skin-webbed feet take fright, and in flocks
  4. trample the white shoots of paddy rising in the plough furrows.

What the poem says

A picture of the farmland. Jackfruit growing from the root drips honey-sweet juice into the fields. When the ploughmen goad their oxen, the startled swans scatter across the fields and trample the tender rice seedlings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūl aṭip palaviṉ cuḷai tūṅka tēṉ,
kōl aṭippa verīi, kula maḷḷar ērc
cāl aṭit tarum cāliyiṉ veṇ muḷai,
tōl aṭik kaḷai aṉṉam, tuvaippaṉa.