கம்பராமாயணம் 4696zd · கிட்கிந்தா 14.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செருகு உறும் கணின் - கூந்தல் வரை நீண்டுள்ள (மகளிரின்) கண் போன்ற; தேம் குவளைக் குலம் - தேனையுடைய குவளைப் பூக்களின் கூட்டம்; அருகு உறங்கும் - பக்கங்களில் உறங்குவது போலக் குவிந்திருக்கும்; வயல் மருங்கு - நீர் நிறைந்த வயலிடங்களில்; ஆய்ச்சியர் - (அந்த நாட்டு) இடைச்சியரின்; இரு குறங்கு பிறங்கிய வாழையில் - இரண்டு தொடைகளைப் போல விளங்கிய வாழை மரங்களிலே; குருகு உறங்கும் - நாரைகள் தூங்கும்; குயிலும் துயிலும் - (அங்கே) குயில்களும் தூங்கிக் கொண்டிருக்கும்.
ஆல்: ஈற்றசை. பகற்பொழுதில் குவளைமலர்கள் குவிந்து குறுகியிருக்குமாதலால் அவை மகளிரின் குறுகிய கடை நோக்கிற்கு உவமையாயின. வாழை: மகளிர் தொடைக்கு உவமை; எதிர் நிலையணி: இந்த அணியினால் குவளைமலர் வாழை என்ற இவற்றை விட மகளிரின் கண்ணும், தொடையும் மிகுந்த சிறப்புடையன என்பது பெறப்படும். முடித்துச் செருகப்படுவதால் கூந்தல் 'செருகு' எனப்பட்டது; முதனிலைத் தொழிலாகு பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- By the fields where clusters of honeyed lilies, like eyes stretching to the hair,
- sleep at the edges, on the plantains that shine
- like the two thighs of the herdswomen,
- herons sleep, and the cuckoos slumber too.
What the poem says
A peaceful midday scene. The blue water-lilies, closed in daylight, are compared to women's long eyes, and the smooth plantain trunks to the thighs of herdswomen. Herons and cuckoos doze among them. The commentary notes that the comparison implies women's eyes and thighs surpass the lilies and plantains.