கம்பராமாயணம் 4696ze · கிட்கிந்தா 14.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தெருவின் ஆர்ப்புறும் - வீதிகளில் ஆரவாரிக்கின்ற; பல் இயம் - பல வகை இசைக் கருவிகளின் ஒலிகளை; தேர் மயில் - கேட்டுணர்ந்த மயில்கள் (அந்த முழக்கத்தை); கருவி மா மழை என்று - மழைக்கு முதற்காரணமாகிய மேகத்தின் இடியென்று மயங்கி; களிப்பு உறா - மகிழ்ச்சியடையமாட்டா; அன்னமும் - (அங்குள்ள) அன்னப் பறவைகளும்; பொருநர் தண்ணுமைக்கு - கூத்தர் முழக்கும் மத்தள வோசை கேட்டு (அதை மேகத்தின் இடியென்று மயங்கி); போகல - (அதற்கு அஞ்சி) விலகிச் செல்லமாட்டா; மருவினார்க்கு - எப்போதும் கலந்து பழகுகின்றவர்களுக்கு; மயக்கம் உண்டாம் கொலோ - மன மயக்கம் உண்டாகுமோ? (உண்டாகாது).
மேகத்தின் இடியோசைகேட்டு மகிழ்ச்சியடைதல் மயில்களுக்கும், அஞ்சுதல் அன்னப் பறவைகளுக்கும் இயல்பு. ஆனால், எப்பொழுதும் அத் தொண்டை நாட்டு வீதிகளில் விழா நடப்பதால் பலவகை வாத்திய ஓசைகளைக் கேட்டுப் பழகிய மயில்களுக்கு அந்த ஆரவாரவொலி மகிழ்ச்சியை உண்டாக்குவதில்லை; அங்குள்ள அன்னப் பறவைகளும் அவ்வாத்திய ஒலி கேட்டு அஞ்சி அகல்வதில்லை; இதனால் பழக்கமே அவற்றிற்குத் துணிவைத் தந்தது என்பது. பொருநர்: கூத்தாடுவோர். போர்க்களம் பாடுவோர் ஏர்க்களம் பாடுவோரென இரு வகையினர். பல் இயம்: தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி எனப் பலவகைப்படும். வேற்றுப் பொருள் வைப்பணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The peacocks, used to the many instruments that roar in the streets,
- do not rejoice, thinking it the thunder of great rain clouds;
- the swans do not flee from the drums of the dancers;
- can those who live with a thing be deceived by it?
What the poem says
Peacocks normally dance with joy at thunder, and swans flee from it. But in the Toṇṭai country festivals fill the streets with music every day, so the birds are so used to the noise that they no longer mistake it for thunder. The last line draws the general moral: familiarity removes confusion.