கம்பராமாயணம் 4696zf · கிட்கிந்தா 14.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேரை வென்று உயர் - தேர்போல உயர்ந்த (விரிந்த) தலையையுடைய; தெங்கு இளம் பாளையை - தென்னை மரத்தின் இளமையான பாளையைக் (கண்டு); இளங் கெண்டை - கெண்டை மீன் குஞ்சுகள்; நாரை என்று நடுங்குவ - (அது தங்களைக் கொத்தித் தின்ன வரும்) நாரையென்று நினைத்து அஞ்சி நடுங்கும்; தாரை வன் தலை - கூர்மையான வலிய நுனியுள்ள; தண் இள ஆம்பலை - அரும்பைக் கொண்ட குளிர்ந்த இளைய அல்லித் தண்டைக் கண்டு; தேரை - தேரைகள் (தவளைகள்); சேரை என்று - (அவை நம்மை விழுங்க வரும்) சாரைப் பாம்பென்று நினைத்து; புலம்புவ - (அஞ்சி) வாய்விட்டு அலறும்.
ஏ: ஈற்றசை. விரியாத தென்னம்பாளைகள் நாரைகளையும், அரும்புகளையுடைய செவ்வல்லித் தண்டுகள் சாரைப் பாம்புகளையும் வடிவத்தால் ஒக்கும்; தென்னம் பாளையை இளங்கெண்டை மீன்கள் நாரையாகவும், செவ்வல்லித் தண்டினைத் தேரைகள் சாரைப் பாம்புகளாகவும் எண்ணி அஞ்சிப் புலம்பியதாகக் கூறியது மயக்கவணி. சேரை என்பது சாரை என வழங்கும். தாரை: கூர்நுனி (தார்க் குச்சி என்ற தொடரில் கூர்மை என்ற பொருளில் வருவது காண்க).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing the young spathe of the coconut that rises tall, surpassing a chariot,
- the young keṇṭai fish tremble, taking it for a heron;
- and seeing the cool young water-lily with its strong pointed tip,
- the frogs cry out, taking it for a rat snake.
What the poem says
Two comic mistakes that show how rich the land is. Young fish take an unopened coconut spathe for a heron about to snap them up, and frogs take a pointed lily stalk with its bud for a snake. This is the figure of "confusion," where one thing is mistaken for another because they look alike.