கம்பராமாயணம் 4696zg · கிட்கிந்தா 14.44

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நள்ளி வாங்கு - பெண் நண்டுகளைப் பிடிக்கின்ற; இளங் நடை நவ்வியர் - இளமைப் பருவத்து மான்போன்ற உழத்தியர்; வெள்ளி வால் வளை - ஒளியுடைய வெண்ணிறமான சங்குகள்; வீசிய வெண்மணி - ஈன்ற வெண்மையான முத்துக்களை; புள்ளி நாரை - புள்ளிகளையுடைய நாரைகளின்; பொரியாத சினை என்று - பொரிக்கப்படாத முட்டைகளாகுமென்று; உள்ளி - நினைத்து; ஆமை முதுகின் உடைப்பர் - (அந்த முட்டைகளை) அருகிலுள்ள ஆமைகளின் முதுகில் உடைப்பார்கள்.

ஆல்: ஈற்றசை. உழத்திப் பெண்கள் வயல்களில் பெண் நண்டு பிடிக்கும் போது அங்கே கிடக்கின்ற சங்குகள் ஈன்ற முத்துக்களை நாரைகளின் முட்டைகள் என்று நினைத்து, அவற்றை ஆமைகளின் முதுகில் உடைப்பார்கள் என்பது. மயக்கவணி. வெள்ளி வால்: ஒருபொருட் பன்மொழி. நள்ளி: பெண்நண்டு; அலவன்: ஆண்நண்டு. ஒப்பு: 'செந்நெல் அரிவார் சினையாமை வன்முதுகில், கூனிரும்பு தீட்டும் குலக் கோசல நாடன்' (நள. 140)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The young field-women, doe-eyed, who catch the female crabs,
  2. thinking the white pearls cast up by the bright white conches
  3. are the unhatched eggs of the speckled heron,
  4. break them on the backs of tortoises.

What the poem says

Another playful scene of plenty: the fields are so rich that conches lie about yielding pearls, and the women catching crabs mistake the pearls for heron eggs and crack them on the shells of tortoises. The commentary compares a similar image in the Naḷaveṇpā.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naḷḷi vāṅku kaṭai iḷa navviyar,
veḷḷi vāl vaḷai vīciya veṇ maṇi,
'puḷḷi nāraic ciṉai poriyāta' eṉṟu
uḷḷi, āmai mutukiṉ uṭaipparāl.