கம்பராமாயணம் 4696zh · கிட்கிந்தா 14.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சேட்டு இளங் கடுவன் - மிக இளமையான ஆண்குரங்கின்; சிறு புன் கையில் - மிகச் சிறிய கையிலேயுள்ள; கோட்ட - கிளைகளிலுண்டான; தேம் பலவின் கனி - இனிய பலாப் பழத்தின்; கூன் சுளை - வளைந்த சுளைகளிலே; தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு - இதழ்களையுடைய மலர்கள் நிறைந்த சோலைகளில் மொய்க்கும்; தேன் ஈட்டம் என்ன - வண்டுகளின் கூட்டம் போல; ஈ இனம் சென்று மொய்ப்பன - ஈக்களின் கூட்டம் மொய்த்துக் கொள்ளும்.
ஆண்குரங்குகளின் கையிலேயுள்ள பலாச் சுளையில் ஈக்கள் மொய்ப்பதற்குச் சோலைகளிலுள்ள மலர்களில் வண்டுகள் மொய்த்ததை உவமை கூறினார். சேட்டிளம், சிறுபுன் - ஒருபொருட் பன்மொழிகள். (சேடு + இளம் - சேட்டிளம். தோடு + அமைந்த - தோட்டமைந்த.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the curved segments of the fruit of the sweet jackfruit from the branches,
- held in the small weak hand of a very young male monkey,
- swarms of flies settle and cluster,
- like the throngs of bees that hang in groves full of petals.
What the poem says
Flies crowding on a piece of jackfruit in a young monkey's hand are compared to bees swarming over flowers in a grove. The verse simply adds to the picture of a land overflowing with fruit and honey.