கம்பராமாயணம் 4696zj · கிட்கிந்தா 14.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(வானர வீரர்) கொடிறு தாங்கிய - கீழ்த் தாடை பொருந்திய; வாய் - அலகாகிய வாயினையுடைய; குழுநாரை - கூட்டமான நாரைகள்; வாழ் தடறு - வசிக்கும் நீர்க்கரைகளில்; தாங்கிய - முளைத்து வளர்ந்துள்ள; கூன் இளந் தாழையின் - வளைந்த இளமையான தென்னை மரத்தின்; மிடறு தாங்கும் - கழுத்துப் பக்கம் சுமந்து கொண்டிருக்கின்ற; விருப்பு உடைத் தீம் கனி - (உண்பவர்க்கு) விருப்பத்தையுண்டாக்குகின்ற பழுத்துக் கீழே உதிர்ந்து கிடக்கும் சுவையான தெங்கம் பழங்களால்; இடறுவார் - கால் இடறித் தடுக்கி விழுவார்கள்; நறுந்தேனின் - (அங்குப் பாயும்) சுவையான தேன் பெருக்கினால்; இழுக்குவார் - வழுக்கிவிழுவார்கள்.
வானரவீரர் சோழ நாட்டிற் செல்லும்போது இடைவழியிலே முற்றிக் கீழே வீழ்ந்துள்ள தேங்காய்களினால் காலிடறியும், தேன் பெருக்கால் வழுக்கியும் வருந்திச் சென்றார்கள் என்பது. இச் செய்யுள், தென்னைமர மிகுதியையும், தேன் மிகுதியையும் விளக்குவது. வீறுகோளணி. தாழை - தென்னை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the banks where flocks of herons with jawed beaks live,
- from the young curved coconut palms growing there,
- the sweet, desirable fruits borne at their necks
- trip them up, and they slip on fragrant honey.
What the poem says
The Cōḻa land is so fertile that ripe coconuts lie everywhere on the ground for the monkeys to stumble over, and honey runs so freely that they slip in it. Plenty itself becomes the obstacle.