கம்பராமாயணம் 4696zk · கிட்கிந்தா 14.48

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கரு நீர்க் காக்கை - கரிய நிறமுள்ள நீர்க் காக்கைகள்; குழுவும் மீன் - கூட்டமாகத் திரளும் தன்மையுள்ள மீன்கள்; வளர் - வளர்வதற்கு இடமான; குட்டம் எனக் கொளா - சிறு குட்டையென்று நினைத்து; எழுவு பாடல் - (சுருதி கூட்டுவதற்கு) எழுப்புகின்ற பாடல்போல; இமிழ் கரும்பு எந்திரத்து - ஒலிக்கின்ற கரும்பாலையிலிருந்து; ஒழுகு சாறு - பெருகுகின்ற கரும்புச்சாறு (கரும்புப் பால்) நிறைந்த; அகல் கூனையின் - வாய் அகன்ற மிடாவில்; ஊழ்முறை முழுகி - ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கி; முளைக்கும் - மேலே கிளம்பும்.

ஏ: ஈற்றசை. ஆலையாடிக் கரும்புச் சாறு நிரம்பிய மிடாவை நீர்க் காக்கைகள் மீன்கள் நிரம்பிய குளங்களென்று மயங்கி அவற்றில் தம் உணவாகிய மீன்களைக் கொத்தித் தின்பதற்காக மூழ்கி மூழ்கி இரை பெறாது வெளிக் கிளம்பும் என்பது. சோழநாட்டின் வளம் புலனாகிறது. இதுவும் மயக்கவணி. கூனை: கரும்புச் சாறு காய்ச்சுவதற்குரிய

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Taking it for a pond where shoals of fish grow,
  2. in the wide vats where juice flows from the sugarcane presses
  3. that hum like a song tuned up, one after another
  4. the dark water-crows dive in, and come up again.

What the poem says

Cormorants mistake the great vats of sugarcane juice beside the humming cane mills for fish ponds; they dive in again and again and come up with nothing. Another figure of "confusion" showing the wealth of the Cōḻa country.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuḻuvum mīṉ vaḷar kuṭṭam eṉak koḷā,
eḻuvu pāṭal imiḻ karuppu ēntirattu
oḻuku cāṟu akaṉ kūṉaiyiṉ ūḻ muṟai
muḻuka, nīrk karuṅ kākkai muḷaikkumē.