கம்பராமாயணம் 4696zn · கிட்கிந்தா 14.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வினையின் நீங்கிய பண்பினர் - தீவினைகளிலிருந்து நீங்கிய நற்குணமுடைய வானர வீரர்கள்; அனைய - அத்தகைய வளங்கள் நிறைந்த; பொன்னி அகல் புனல் நாடு - காவிரிநதி பாயும் அகன்ற நீர்வளமிக்க சோழநாட்டை; ஒரீஇ - விட்டு நீங்கி; மனையின் மாட்சி குலாம் - இல்லறச் சிறப்புக்கள் மிகுந்து விளங்கும்; மலை மண்டலம் - மலைநாடாகிய சேர நாட்டை; மேயினார் - சேர்ந்தவர்களாகி (அதையும் நீங்கி); இனிய தென் தமிழ்நாடு - இனிமையான தமிழ் வழங்கும் தமிழ் நாடாகிய பாண்டி மண்டலத்தை, சென்று எய்தினார் - போய்ச் சேர்ந்தார்கள்.
காவிரியாறு பாய்ந்து செழுமை வாய்த்துள்ளதால் சோழநாடு 'புனல் நாடு' என்ற பெயருடன் விளங்குகிறது. சேர நாட்டவர் இல்லறவொழுக்கத்தில் தவறாது நடப்பவராதலால் அதற்கு 'மனையின் மாட்சி குலாம்' என்று அடைமொழி கொடுக்கப் பெற்றது. மலை மண்டலம்: மலைநாடு; சேரநாடு. செந்தமிழ்நாடு: பாண்டிநாடு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Leaving that wide land of the Poṉṉi's waters,
- they, whose nature was free of evil deeds, reached the hill country
- where the excellence of household life shines,
- and went on to reach the sweet southern Tamil land.
What the poem says
The monkeys cross from the Cōḻa land into the Cēra hill country, praised for its people's devotion to family life, and then into the Pāṇṭiya kingdom, the far southern Tamil land famed for the sweetness of its Tamil.