கம்பராமாயணம் 4698 · கிட்கிந்தா 15.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீர் - நீங்கள்; விரிந்து - பரவி; எண்திசை மேவி - எட்டுத் திக்குகளுக்கும் சென்று; நாடினீர் - (சீதையைத்) தேடியவர்களாய்; மயேந்திரத்துப் பொருந்துதிர் - மகேந்திர மலையில் (எங்களோடு) வந்து கூடுங்கள்; என்று - என்று கூறி; போக்கிய - (அங்கதன் முதலோர்) முன்பு அனுப்பிய; அருந்துணை - அரிய துணையாக வந்த, கவிகள் ஆம் அளவு இல் சேனையும் - எண்ணிக்கையற்ற வானர சேனையும்; பெருந்திரைக் கடல் என - பெரிய அலைகளையுடைய மற்றொரு கடலைப் போல; பெரிதும் கூடிற்று - (அங்கதன் முதலான வானர வீரரிடம்) பெருங் கூட்டமாக வந்து சேர்ந்தது.
அனுமன் முதலிய வானரத் தலைவருடன் சுக்கிரீவனால் அனுப்பப்பட்டவர் இரண்டு வெள்ளம் கொண்டு பெருஞ்சேனையர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Spread out, go to the eight directions and search,
- then join us at Makēntiram," so they had been sent off,
- and that boundless army of monkeys, rare companions,
- gathered there in a great host like the sea of great waves.
What the poem says
The monkey troops who had fanned out across the land, under orders to regroup at Mount Mahendra, now stream back to the leaders, a host as vast as a second ocean beside the first.