கம்பராமாயணம் 4705 · கிட்கிந்தா 15.9

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எந்தையும் முனியும்; எம் இறை இராமனும்
சிந்தனை வருந்தும்; அச்செய்கை காண்குறேன்
நுந்துவென் உயிரினை; நுணங்கு கேள்வியீர்!
புந்தியின் உற்றது புகல்திர் ஆம்'என்றான்.

பொருள் · Meaning in Tamil

எந்தையும் முனியும் - (செயலை முடிக்காமல் தவணை கடந்த பிறகு மீண்டு சென்றால்) என் தந்தையான மன்னனும் நம்மைக் கோபிப்பான்; எம் இறை இராமனும் - நம் தலைவனான இராமனும்; சிந்தனை வருந்தும் - மனம் வருந்துவான்; அச்செய்கை காண்குறேன் - அந்த நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணும் திறமுடையவனாகேன்; உயிரினை - ஆதலால் நான் என்னுயிரை; நுந்துவென் - வலிதில் மாய்த்துக் கொள்வேன்; நுணங்கு கேள்வியீர் - நுட்பமான நூற்கேள்வியுடையவர்களே! புந்தியின் உற்றது - உங்கள் அறிவில்பட்டதை; புகல்விர் - ஆராய்ந்து கூறுவீர்; என்றான் - என்று (அங்கதன்) சொன்னான்.

ஆம்: அசை. சுக்கிரீவன் கடுந்தண்டனைக்கும், இராமனின் பெரு வருத்தத்திற்கும் அஞ்சி அங்கே போகாமல் இங்கேயே உயிர்போக்குவது நல்லது என்று எண்ணுகிறேன்; இதைக் குறித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்களென்று அங்கதன் மற்றவர்களை வினாவினான் என்பது. நுந்துதல்: வலுவில் உயிர்போக்குதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "My father will be angry; our lord Irāmaṉ
  2. will grieve in his heart; I cannot bear to see that.
  3. I shall cast off my life. You of subtle learning,
  4. tell me what comes to your minds," he said.

What the poem says

Aṅkataṉ refers to Cukkirīvaṉ, his uncle and now his king, as "my father." Unable to face the king's wrath or Irāmaṉ's sorrow, he declares he will end his life, and asks the learned elders for their view.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'entaiyum muṉiyum; em iṟai irāmaṉum
cintaṉai varuntum; ac ceykai kāṇkuṟēṉ
nuntuveṉ uyiriṉai; nuṇaṅku kēḷviyīr!
puntiyiṉ uṟṟatu pukalvir ām' eṉṟāṉ.