கம்பராமாயணம் 4704 · கிட்கிந்தா 15.8

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செய்தும் என்று - நாம் செய்வோம் என்று; அமைந்தது - ஏற்றுக் கொண்ட செயலை; செய்து தீர்ந்திலம் - செய்து முடித்தோமல்லோம்; நொய்து சென்று - (குறித்த தவணைக் காலத்திற்குள்) விரைவாகத் திரும்பிச் சென்று; உற்றது நுவலகிற்றிலம் - நிகழ்ந்த வரலாற்றைத் தெரிவிக்கவும் வலியற்றவரானோம்; வந்து எய்தும் என்பது - (தவணை கடந்தாலும்) காரியம் கைகூடும் என்பதை; ஓர் இறையும் கண்டிலம் - ஒரு சிறிதும் அறிந்தோமில்லை (இப்படியிருப்பதால்); உய்தும் என்றால் - உயிரைப் பிடித்துக் கொண்டு நாம் வாழ்வோமென்றால், இது - அவ்வாறு நாம் உயிர்வாழும் செயல்; ஓர் உரிமைத்து ஆகுமோ - மேற்கொண்ட நட்புக்குத் தகுதியான ஒரு செயலாகுமோ? (ஆகாது).

நாம் எண்ணிவந்த செயல் முடிவதற்கு எந்த வகையிலும் சிறிதும் வழியில்லை; தவணைக் காலத்திற்குள் மீண்டு சென்று சேர்தலும் முடியாது; ஆகையால் உயிர்போக்குவதே உறுதியென்று அங்கதன் அறுதியிட்டான் என்பது. நுவலகிற்றிலம்: தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று; கில் - ஆற்றலையுணர்த்தும் இறந்தகால இடைநிலை. இறை: மிகச்சிறிய.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "What we agreed, 'We shall do it,' we have not done;
  2. we cannot go back swiftly and report what happened;
  3. we see not the slightest sign that it will come right;
  4. if we say 'We shall live,' would that befit our bond?"

What the poem says

Aṅkataṉ continues: the task is undone, they cannot return in time, and there is no hope left. To cling to life now would be unworthy of their friendship with Irāmaṉ. He has resolved that death is the only honourable course.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"ceytum' eṉṟu amaintatu ceytu tīrntilam
noytu ceṉṟu uṟṟatu nuvalakiṟṟilam
'eytum vantu' eṉpatu ōr iṟaiyum kaṇṭilam
'uytum' eṉṟāl itu ōr urimaittu ākumō?"