கம்பராமாயணம் 4703 · கிட்கிந்தா 15.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாம் - (அங்கதன் வானரர்களை நோக்கி) நாம் எல்லோரும், வான் மூடிய உலகினை - வானத்தினால் கவியப் பட்ட உலகத்தை; முற்றும் முட்டி நாடி - முழுவதும் சென்று தேடிப் பார்த்து; நளினத் தாளை - தாமரை மலரில் வாழும் திருமகளான சீதையை; கொணருதும் என்று - மீட்டு வருவதற்குரிய செய்தியைக் கொண்டு வருவோம் என்று; ஆடவர் திலகனுக்கு - ஆண்களில் திலகம் போன்ற இராமனுக்கு; அன்பினார் என - அன்புடையவர் போல; பாடவம் விளம்பினம் - நம் வல்லமையைக் கூறினோம்; பழியில் மூழ்குவோம் - ஆனால் இப்பொழுதோ நாம் தீராப்பழிக்கே உள்ளாகிவிட்டோம்.
சீதையைத் தேடுமாறு நம்மை அனுப்பிய காலத்தில் இராமனிடத்துப் பத்தியுடையவர்போல நடித்துச் செயலை முடித்தே தருவோமென்று வல்லமையாகக் கூறியது இப்போது நமது பழிப்புக்கே காரணமாம் என அங்கதன் கூறினான் என்பது. ஆடவர் திலகன்: திலகம் நெற்றிக்கு விளக்கத்தைச் செய்வதுபோல ஆடவர்களுக்கு விளக்கம் செய்பவன் இராமன் என்பது குறிப்பு. பாடவம்: வீண் பெருமை, வல்லமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'We will search the whole world under the covering sky
- and bring back the lady of the lotus,' so
- to the jewel among men, as though we loved him,
- we boasted of our skill; now we shall drown in disgrace."
What the poem says
Aṅkataṉ recalls how confidently they promised Irāmaṉ, "the forehead-mark among men," that they would find Cītai, and how that boast will now become their shame.