கம்பராமாயணம் 4702 · கிட்கிந்தா 15.6

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரசு இளங் கோள் அரி - இளவரசனும் சிங்கம் போன்றவனுமான அங்கதன்; அயரும் சிந்தையான் - வருந்திய மனத்தையுடையவனாய்; கரை பொரு கடல் அயல் - கரையை மோதுகின்ற அலை கடலுக்கு அருகிலுள்ள மகேந்திர மலையில்; கனக மால் வரை - பெரிய மேரு மலைகள்; நிரை துவன்றிய என - வரிசையாய் நெருங்கி நின்றன என்று சொல்லும்படி; நெடிது இருந்தவர்க்கு - மிகுதியாக இருந்த வானர வீரர்களுக்கு; உரை செயும் பொருள் - 'நான் கூறுவதற்குரிய செய்தி; உளது என - ஒன்று உண்டு' என; உணர்த்தினான் - கூறலானான்.

ஒவ்வொரு வானரனும் மேருமலை போன்றுள்ளான் என்பது. வானரர்களைக் கனக மால்வரை நிரை துவன்றிய எனக் கூறியது இல்பொருளுவமையாம். கனகமால் வரை உருவத்தால் வானரர்க்கு உவமையாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To those who sat there in great numbers, like a row
  2. of great golden mountains crowded beside the sea that beats on the shore,
  3. "There is something I must say," so he announced,
  4. the young lion-like prince, his mind in distress.

What the poem says

Aṅkataṉ, the young crown prince, addresses the assembled monkeys, each of whom looks like a golden Mount Meru ranged along the shore. Since a row of Merus does not exist, the commentary classes this as a comparison with an imaginary object.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karai poru kaṭal ayal kaṉaka māl varai
nirai tuvaṉṟiya eṉa neṭitu iruntavarkku
'uraiceyum poruḷ uḷatu' eṉa uṇarttiṉāṉ;
aracu iḷaṅ kōḷari ayarum cintaiyāṉ.