கம்பராமாயணம் 4701 · கிட்கிந்தா 15.5

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(கிட்கிந்தைக்கு மீண்டு செல்லாமல் இங்கிருந்தபடியே) அருந்தவம் - செய்தற்கரிய தவத்தை, புரிதுமோ - செய்வோமோ? அன்னது அன்று எனின் - அவ்வாறு செய்ய இயலாவிட்டால்; மருந்து அரும் கடு உண்டு - மாற்ற மருந்து எதுவுமில்லாத கொடிய நஞ்சைக் குடித்து, மாய்துமோ - இறந்து அழிவோமோ? திருந்தியது யாது - (இந்த இரண்டில்) தகுதியானது எதுவோ; அது செய்து தீர்தும் - அதைச் செய்து முடிப்போம்; என்று இருந்தனர் - என்று சொல்லி (அந்த மகேந்திர மலையில்) இருந்தவர்கள் (யாவரென்றால்); தம் உயிர்க்கு - தம் உயிர்களுக்கும்; இறுதி எண்ணுவார் - ஒரு முடிவைக் கருதிய அந்த வானரவீரர்கள்.

தவணை நாட்கள் கழிந்த பின்பும் சீதையைக் கண்டுபிடித்தலாகிய செயலை நிறைவேற்றாது கடுந்தண்டனைதரவுள்ள சுக்கிரீவனை எதிரில் செல்வதற்கு அஞ்சியவர்களாய் வானரர் இவ்வாறு எண்ணிக் கூறினார்கள் என்பது.

மருந்து அரு நெடுங்கடு: முறிவில்லாத நஞ்சு; மாற்று மருந்தில்லாத பெரு நஞ்சு. இராமனின் தொண்டில் ஈடுபட்டும் அப் பணியை நிறைவேற்றாது உயிர் வாழ்வதைவிட, உயிர் விடுவதே மேல் என்று அந்த வானர வீரர்கள் கருதினார்கள் என்பது குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Shall we undertake hard penance? If not that,
  2. shall we drink a deadly poison that has no cure and die?
  3. Whichever is fitting, we shall do it and be done," so
  4. they sat there, thinking of an end to their lives.

What the poem says

Afraid to face Cukkirīvaṉ's anger after failing in their task, the monkeys debate whether to stay and do penance or to take poison. The commentary notes the underlying feeling: having pledged themselves to Irāmaṉ's service, they would rather die than live on having failed him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arun tavam puritumō? aṉṉatu aṉṟu eṉiṉ
maruntu aru neṭuṅ kaṭu uṇṭu māytumō?
tiruntiyatu yātu? atu ceytu tīrtum eṉṟu
iruntaṉar tam uyirkku iṟuti eṇṇuvār.