கம்பராமாயணம் 4700 · கிட்கிந்தா 15.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வரை நாள் அவதி - (அரசன் நமக்கு) குறித்த தவணையும்; அற்றது - முடிந்து விட்டது; காட்சியும் உற்றிலம் - சீதையைக் காணுகின்ற காட்சியையும் நாம் பெறவில்லை; இராகவன் உயிரும் - (இதையறிந்தால்) இராமனது உயிரும், பொன்றும் - அழிந்துவிடும்; கொற்றவன் ஆணையும் - அரசனது கட்டளையும்; குறித்து நின்றனம் - மனத்திற் குறித்து நின்றோம்; இனி நம் செயல் இற்றது - இனிமேல் நாம் செய்யக் கூடிய செயலும் இல்லை; என்று எண்ணினார் - என்று கூறி (அந்த வானர வீரர்கள்) பலவாறு சிந்தித்தார்கள்.
கொற்றவன் ஆணை குறித்தது. முப்பது நாட்கள் கடந்தால் தமக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்ற அச்சத்தால் ஆகும். நம் செயல் இற்றது: தெளிவு பற்றிய காலவழுவமைதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The time limit we were given is over; we have not
- even caught sight of her; Irākavaṉ's life will end;
- we have stood mindful of the king's command;
- now there is nothing left for us to do," they thought.
What the poem says
Cukkirīvaṉ had given the search parties a month. That time has passed, Cītai has not been found, and the monkeys fear both that Irāmaṉ will die of grief and that the king will punish them. The commentary notes the tense: they speak of their task as already over because they are certain of it.