கம்பராமாயணம் 4707 · கிட்கிந்தா 15.11

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என்?
மாண்டுறுவது நலம்'என மதித்தனம்;
ஆண் தகை அரசிளங்குமர! அன்னது
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால்.

பொருள் · Meaning in Tamil

ஆண்தகை அரசு இளங்குமர - (மேலும் சாம்பவான் அங்கதனை நோக்கி) ஆடவரிற் சிறந்த இளவரசனான அங்கதனே! மீண்டு - திரும்பிச் சென்று; இனி நாம் - இனிமேல் நாங்கள்; ஒன்று விளம்ப மிக்கது என் - சொல்லக் கூடிய செய்தி என்ன உள்ளது? (ஒன்றுமில்லை); மாண்டு உறுவது - (ஆதலால்) நாங்கள் இறந்து விடுவதே; நலம் என வலித்தனம் - நல்லதென்று உறுதி கொண்டோம்; அன்னது வேண்டலின் - அவ்வாறு இறந்து போவதை (நாங்கள்) விரும்பினபடியால், நின் உயிர்க்கு உறுதி வேண்டும் - உனது உயிர் அழியாமல் இருக்க வேண்டும்.

சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க மாட்டாமல் நாங்கள் மீண்டுபோய்ச் சொல்வதற்கும் ஒன்றுமில்லை; ஆதலால், நாங்கள் இறந்து விடுவதே தகுதியென்று தோன்றுகிறது, இளவரசனாயிருப்பதால் நீ உயிருடன் வாழ்வது மிக இன்றியமையாததாகுமென்று சாம்பவான் கூறினான் என்பது. ஆல்: ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If we go back, what more is there for us to say?
  2. We have resolved that dying is best;
  3. O prince, heroic young king, since that
  4. is what we choose, your life must be kept safe."

What the poem says

Cāmpaṉ turns the argument round. The rest of them will die, since they have nothing to report, but Aṅkataṉ, as heir to the throne of the monkeys, must stay alive and go home.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mīṇṭu iṉi oṉṟu nām viḷampa mikkatu eṉ?
māṇṭuṟuvatu nalam' eṉa valittaṉam;
āṇ takai aracu iḷaṅkumara! aṉṉatu
vēṇṭaliṉ niṉ uyirkku uṟuti vēṇṭumāl.