கம்பராமாயணம் 4708 · கிட்கிந்தா 15.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று அவன் உரைத்தலும் - இவ்வாறு சாம்பவான் கூறியதும்; இருந்த வாலி சேய் - அதனைக் கேட்டிருந்த வாலி மகனான அங்கதன்; குன்று உறழ்ந்தென - மலைகள் ஒப்பானவை என்று சொல்லும்படி; வளர் குவவுத் தோளினீர் - வளர்ந்துள்ள திரண்டு தோள்களையுடையவர்களே! நீர் பொன்றி மடிய - நீங்கள் யாவரும் இங்கே இறந்தொழிய; யான் போவனேல் - நான்மட்டும் உயிரோடு தனியே திரும்பிப் போவேனானால், அது நன்றதோ - அச் செயல் நல்லதாகுமோ? உலகமும் - உலகில் வாழும் சான்றோராலும், நயக்கற்பாலதோ - விரும்பத் தக்கதாகுமோ? (ஆகாது).
நன்றது: 'அது' பகுதிப் பொருள் விகுதி. 'நீங்கள் அனைவரும் மடிய நான் மட்டும் திரும்பிச் செல்வது நல்லதா? அதை உலகத்தவர்தான் விரும்புவார்களோ?' என்று அங்கதன் கேட்டான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had said this, Vālī's son, who sat there, replied:
- "You whose massive shoulders have grown to rival mountains!
- If you all perish and die, and I go back,
- would that be good? Would the world approve of it?"
What the poem says
Aṅkataṉ, son of Vālī, rejects Cāmpaṉ's suggestion. He cannot go home alone while all his comrades die; the good and wise of the world would never approve of such a thing.