கம்பராமாயணம் 4709 · கிட்கிந்தா 15.13

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சான்றவர் பழியுரைக்கு அஞ்சி - சான்றோர்கள் கூறும் பழிச் சொல்லுக்கு அஞ்சி; தன் உயிர் போன்றவர் - தன் உயிரையொத்த நண்பர்கள் யாவரும்; மடிதர - இறந்துபோகவும்; போந்துளான் என - (இவன் மட்டும் இறவாமல் உயிருடன்) வந்து சேர்ந்துள்ளானென்று; ஆன்ற பேருலகு உளோர் - உயர்ந்த உலகிலுள்ள பெரியோர்; அறைதல் முன்னம் - (பழித்துக்) கூறுவதற்கு முன்பே; யான் வான் தொடர்குவென் - நான் இறந்து மேலுலகம் செல்வேன்; என - என்று சொல்லி; மறித்தும் கூறுவான் - மீண்டும் கூறலாயினான்.

மீண்டு சென்றால் வீண்பெருமை கூறி ஏற்றுக் கொண்ட செயலை முடிக்காமல் வெறுங்கையோடு மீண்டார்களே' என்று பெரியோர் கூறும் பழிச் சொல்லுக்கு அஞ்சி உயிர்போன்ற நண்பர் யாவரும் உயிர்விடவும் இவன்மட்டும் அச்சம் சிறிதுமின்றி மீண்டான் என்ற உலகத்தவரின் பழிச் சொல்லுக்குச் சிறிதும் இடமில்லாமல் முன்னரே மாய்ந்தொழிவேன் என்று அங்கதன் கூறினான் என்பது.

மடிதரல்: தரல் - துணைவினை. வான் தொடர்குவென்: இறந்தவர் வானுலகம் செல்வர் என்ற மரபுபற்றி வந்த வழக்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'Afraid of the reproach of the wise, he came back
  2. while those dear to him as his own life died,' so
  3. before the people of this great world can say it, I
  4. will go to heaven," so he spoke again.

What the poem says

Aṅkataṉ imagines the gossip: that he came home safely while his friends, who feared disgrace more than death, gave up their lives. Before anyone can say that of him, he will die first. "Going to heaven" follows the tradition that the dead rise to the world above.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"cāṉṟavar paḻi uraikku añcit taṉ uyir
pōṉṟavar maṭitarap pōntuḷāṉ" eṉa
āṉṟa pēr ulaku uḷōr aṟaital muṉṉam yāṉ
vāṉ toṭarkuveṉ' eṉa maṟittum kūṟuvāṉ.