கம்பராமாயணம் 4716 · கிட்கிந்தா 15.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பின்னரும் கூறுவான் - அனுமன் மேலும் சொல்லுவான்; பிலத்தில் - பாதாள உலகத்திலும், வானத்தில் - தேவருலகத்திலும், பொன் வரைக் குடுமியில் - பொன்மலையான மேரு மலைச் சிகரத்திலும்; புறத்துள் அண்டத்தில் - மற்றும் அப்பாலுள்ள அண்டங்களிலும்; நன்னுதல் தேவியை - அழகான நெற்றியையுடைய சீதையை; நாம் காண்டும் எனில் - நாம்தேடிக் காண்போமானால்; இறைவன் - (நம்) அரசனான சுக்கிரீவன்; சொன்னநாள் அவதியை - நமக்குக் குறித்த தவணை நாட்களில் எல்லை கடந்ததைப்பற்றி, சொல்லுமோ - குற்றமாக எடுத்துக் கூறுவானோ?
ஓ: வினா இடைச் சொல்.
சீதையைத் தேடிக் காண்பது இன்றியமையாத தொழிலாதலால் தவணை நாள் கடந்தமைக்குச் சிறிதும் கலங்காது நாம் மேற்கொண்ட செயலில் ஊக்கங்கொள்வதுதான் தக்கது; அவ்வாறு அச் செயலை நாம் சிறப்பாகச் செய்து முடித்தால் சுக்கிரீவன் நம் செயலைப் பாராட்டுவனேயல்லாமல் ஒரு நாளும் கண்டிக்கவே மாட்டான் என்று அவ் வானரர்க்கு அனுமன் எடுத்துரைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He spoke further: "If in the netherworld, in the heavens,
- on the summit of the golden mountain, or in the worlds beyond,
- we find the queen of the fair brow,
- will our king speak of the time limit he set?"
What the poem says
Aṉumaṉ argues that the deadline does not matter. Finding Cītai is what counts; if they search everywhere, from the underworld to heaven and beyond, and succeed, Cukkirīvaṉ will praise them, not blame them for being late.