கம்பராமாயணம் 4717 · கிட்கிந்தா 15.21

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நாடுதலே நலம் இன்னும் நாடி அத்
தோடு அலர் குழலி தன் துயரில் சென்று அமர்
வீடிய சடாயுவைப் போல வீடுதல்
பாடவம் அல்லது பழியிற்றாம்'என்றான்.

பொருள் · Meaning in Tamil

இன்னும் நாடுதலே நலம் - இனிமேலும் சீதையைத் தேடிப் பார்த்தலே நற்செயலாகும் (ஆதலால்); நாடி - நாம் தேடியும் (அச்சீதையைக் காணாவிட்டால்); அத்தோடு அலர் குழலிதன் - இதழ்களையுடைய பூக்கள் பொலிந்த கூந்தலையுடைய சீதையின்; துயரின் சென்று - (இராவணனால் நேர்ந்த) துன்பத்திற்காக (அவளைக் காக்க) எதிரே போய்; அமர் வீடிய - அதனால் ஏற்பட்ட போரில் உயிர்மாய்ந்த; சடாயுவைப் போல - சடாயுவைப் போல; வீடுதல் - (நாமும் சீதையைத் தேடும் செயலில்) உயிர் விடுதல்; பாடவம் - பெருமையாகும்; அல்லது - அப்படிச் செய்யாது நீங்கள் கருதியபடி இப்போதே உயிரை விடுவது; பழியிற்று ஆம் - பழிக்கு இடமாகும்; என்றான் - என்று கூறினான்.

நம்மால் முடிந்தவரை எல்லாவிடங்களிலும் சீதையைத் தேடிப் பார்த்தும் அவள் அகப்படாவிட்டால் அப்போது நாம் உயிர்விடுவது சிறந்ததாகுமேயல்லாமல் இப்பொழுதே உயிர்விடுவோமென்பது தக்கதாகாது என்று அனுமன் அவ் வானரர்களிடம் கூறினான்.

தோடலர் குழலி: அன்மொழித் தொகை. பாடவம்: பெருமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Searching on is best; if after searching still we fail,
  2. then to die like Caṭāyu, who went to the aid
  3. of the one whose hair is full of opened petals in her distress, and fell in battle,
  4. would be glory; anything else brings disgrace," he said.

What the poem says

Aṉumaṉ sets out the honourable path. Keep searching; if all else fails, die as Caṭāyu did, fighting for Cītai. To die now, without trying, would be shameful. His mention of Caṭāyu's death sets off the next scene.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nāṭutalē nalam iṉṉum nāṭi at
tōṭu alar kuḻalitaṉ tuyariṉ ceṉṟu amar
vīṭiya caṭāyuvaip pōla vīṭutal
pāṭavam allatu paḻiyiṟṟu ām' eṉṟāṉ.